சிரியா சிறையில் கலவரத்தை பயன்படுத்தி 20 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பியோட்டம்.?

சிரியாவில் நிலநடுக்கம் உணரப்பட்ட போது, சிறையில் இருந்து 20 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையோர நகரமான ராஜோவில் உள்ள சிறையில் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட போது சிறையின் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள் சேதமடைந்துள்ளன. அந்த பதற்றமான சூழலில் சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் 20 பேர் வரை தப்பியோடியதாக கூறப்படுகிறது. சிறையில் கலவரம் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய சிரிய மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு அமைப்பு, கைதிகள் தப்பிச் … Read more

மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் மேலும் 2 விமானங்களை பூகம்பம் பாதித்த துருக்கிக்கு அனுப்புகிறது இந்தியா

புதுடெல்லி: இந்திய விமானப் படையைச் சேர்ந்த மேலும் 2 விமானங்களில் மீட்புப் படையினரையும், நிவாரணப் பொருட்களையும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா அனுப்புகிறது. சிரிய எல்லையை ஒட்டிய துருக்கி பகுதியில் நேற்று நிகழ்ந்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ள பலரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. . நிலநடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும், … Read more

உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்…. 3 லட்சத்தை தாண்டி போன கொடூரம்!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை பீதியடைய செய்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேதம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் துயரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை … Read more

நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் – 22 மணிநேர போராட்டம்… பெண் உயிருடன் மீட்பு!

Turkey Earthquake Viral Video: துருக்கி மற்றும் அதன் நாடுகளை நேற்று (பிப். 7) ஒரே நாளில் நிலநடுக்கம் தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக, மத்திய துருக்கி பகுதிகளும், சிரியா எல்லைப் பகுதிகளிலும் நேற்று காலையில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் என மொத்தம் ஐந்து முறை ஏற்பட்டுள்ளது.  துருக்கி, சிரியாவை ஆகியவை சேர்ந்த, தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் … Read more

சிரியா நிலநடுக்கம்: பலியான கர்ப்பிணி தாய்; தப்பி பிழைத்த குழந்தை; திக்… திக்… நிமிடங்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயரமான கட்டிடங்கள் பலவும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இந்த இடிபாடுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தை இந்நிலையில் சிரியாவில் ரகத் இஸ்மாயில் என்ற 18 மாத குழந்தை பத்திரமாக … Read more

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கித் தவித்த கர்ப்பிணிக்கு.. ஆண் குழந்தை பிறந்தது!

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அந்த இடிபாடுகளுக்கு இடையே பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அந்த இடத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் பிரசவத்திற்குப் பின்னர் இறந்து விட்டார். துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக இதுவரை 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாகி விட்டன. இந்த நிலையில் … Read more

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த சிரியாவுக்கு 45 டன் நிவாரணப்பொருட்களை அனுப்பிய ஈரான்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்காக ஈரான் அனுப்பிய நிவாரண பொருட்கள், டமாஸ்கஸ் விமான நிலையம் சென்றடைந்தன. துருக்கியில் அடுத்தடுத்து நேரிட்ட நிலநடுக்கங்களால், அண்டை நாடான சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியானதோடு, உறைபனிக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உலக நாடுகள் சிரியா, துருக்கிக்கு உதவி வரும் நிலையில், ஈரான் அரசு சிரியாவுக்கு சுமார் 45 டன் நிவாரண பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. Source link

நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த ஆராய்ச்சியாளர் | Earthquake shatters Turkey, Syria: Early warning researcher heaps praise

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என முன்பே எச்சரித்திருந்தார். ஆனால் துருக்கி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்தது கவலை அளிக்கிறது. துருக்கியில் நிலவும் நிலநடுக்கத்தை போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்.,03ம் தேதி கணித்துள்ளார். இதையடுத்து, அவர் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனானில் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும். ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகும் எனக் … Read more

துருக்கி நிலநடுக்கம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்த விஞ்ஞானி; பேரழிவு தொடருமாம்!

துருக்கி, சிரியாவில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அதிகாலை நேரம் தொடங்கி மாலை வரை 7.8, 7.4, 7.5 என அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில நிமிட இடைவெளியில் 40க்கும் மேற்பட்ட முறை பூமி குலுங்கியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அனைத்தும் சீட்டு கட்டுகள் போல சரிந்து விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கியிருக்கிறது. பயங்கர நிலநடுக்கம் துருக்கி, சிரியாவில் நினைத்து பார்த்திராத அளவிற்கு உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் … Read more

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு, மீட்புக்குழுக்கள் மற்றும் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப்பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் துருக்கி மற்றும் சிரியாவை புரட்டி போட்டுள்ள நிலையில், இருநாடுகளிலும் 4,300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் துருக்கிக்கு உதவும் விதமாக, காசியாபாத் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் மூலம், 100 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், மோப்ப நாய் படைகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதே போல இஸ்ரேல், ஈராக் … Read more