உலகிலேயே அறிவுள்ள மாணவர்: இந்திய வம்சாவளி சிறுமி 2வது ஆண்டாக சாதனை| Indian-American Girl In “World’s Brightest” Students List, Scored Highest

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த, திறமை வாய்ந்த இளைஞர்களுக்கான மையம் சார்பில், ‘உலகின் அறிவுள்ள மாணவர்களுக்கான’ போட்டிகள் நடத்தப்படும். மொத்தம் 76 நாடுகளை சேர்ந்த சுமார் 15,300 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பலகட்ட தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தரம் அறியப்படும். இதில், அமெரிக்காவில் உள்ள புளோரன்ஸ் கவுடினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நடாஷா பெரியநாயகம் (வயது 13) என்பவர், 2021-2022ம் ஆண்டுக்கான பட்டியலில், இரண்டாவது முறையாக, முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவைச் … Read more

சிரிய மக்களை பெருந்துயரில் தள்ளிய நிலநடுக்கம்

டமஸ்கஸ்: துருக்கி – சிரிய எல்லையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,000 -ஐ கடந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இரு நாட்டு மக்களையும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது. உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த சிரியா, மெல்ல மீண்டு கொண்டிருந்த நிலையில், அந்நாட்டு மக்களை இந்த நிலநடுக்கம் மீண்டும் பெருந்துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த நிலநடுக்கத்திற்கு சிரியாவில் மட்டும் 1,444 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த … Read more

துருக்கியை வாட்டி வதைக்கும் இயற்கை: இரண்டாவது நாளாக மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கியில் நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று (பிப்ரவரி 7) மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மீண்டும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணியில் தொய்வு!துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நேற்று நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீட்புப் பணிகளில் தொய்வு … Read more

சிரியா நிலநடுக்கம்.. அமளியைப் பயன்படுத்தி 20 தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஓட்டம்

அஸாஸ், சிரியா: சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்தி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். வட மேற்கு சிரியாவில் உள்ள அஸாஸ் சிறையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 தீவிரவாதிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டனர். ரஜோ என்ற இடத்தில் இந்த சிறை உள்ளது. இது துருக்கி எல்லைப் பகுதியில் இருக்கிறது. மொத்தம் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் 4,300க்கும் மேற்பட்டோர் பலி..!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவின் மூத்த அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார். உலகளவில் அதிகம் நிலநடுக்கம் தாக்கும் மண்டலங்களில் ஒன்றாக துருக்கி அமைந்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால், 17 … Read more

Turkey Earthquake: முன்பே உணர்த்திய பறவைகள்; 2வது நாளாக நிலநடுக்கம்!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பிப்ரவரி 6 அன்று 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்ககத்தால் இதுவரை 45000- க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 5.5 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொறுத்தவரை, முதலில் 7.8 ரிக்டர் அளவு கோலிலும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும், … Read more

அமெரிக்க பாடகி பியோன்சுக்கு 4 கிராமி விருதுகள்: இதுவரை 32 விருதுகளை வென்று சாதனை

வாஷிங்டன், உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. விழாவில் அடீல், டெய்லர் ஸ்விப்ட், ஜே-இசட், ஷானியா டுவைன் மற்றும் ஸ்டீவி வொண்டர் போன்ற உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறந்த நடனம் மற்றும் எலக்ட்ரானிக் ரெக்கார்டிங் பிரிவில் … Read more

தண்டனைபெற்ற பெண் கைதிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்துவதாக உக்ரைன் குற்றச்சாட்டு

தண்டனைபெற்ற பெண் கைதிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போரில் ஏற்பட்டுள்ள பேரிழப்பைத் தொடர்ந்து ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதற்காக நிஷ்னி என்ற நகரத்தில் 50 பெண் கைதிகளை களமிறக்கி உள்ளதாகவும் கூறியுள்ளது. இதேபோல் வீடற்றவர்களையும், ராணுவத்தில் போதிய அனுபவம் இல்லாதவர்களையும் போரில் ஈடுபடுத்தி வருவதாகவும், உக்ரைன் உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கார்கிவ் நகரில் ரஷ்யா தனது எஸ் 300 ரக … Read more

நிலநடுக்கத்தால் துயர சம்பவம்: 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு – துருக்கி அரசு அறிவிப்பு

இஸ்தான்புல், துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 968 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3-வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கியில் … Read more