சிரியா நிலநடுக்கம்.. அமளியைப் பயன்படுத்தி 20 தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஓட்டம்
அஸாஸ், சிரியா: சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்தி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். வட மேற்கு சிரியாவில் உள்ள அஸாஸ் சிறையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 தீவிரவாதிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டனர். ரஜோ என்ற இடத்தில் இந்த சிறை உள்ளது. இது துருக்கி எல்லைப் பகுதியில் இருக்கிறது. மொத்தம் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். … Read more