சிலி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்!

சிலியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. சிலியில் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பக்காற்று வீசுவதால், காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு காடு தீயில் கருகியதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 14ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.86 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 443 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 8 லட்சத்து 49 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

வங்க தேசத்தில் தாக்கப்பட்ட இந்துக் கோயில்கள்; இந்துக்கள் மத்தியில் பீதி!

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இப்போது வங்கதேசத்தில் ஒரே நேரத்தில் 14 கோவில்களை சேதப்படுத்தி, நாசவேலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தால், வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைக்கு பாதுகாப்பில்லாமல் தொடர்ச்சியாக பதற்றத்தில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரிந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். … Read more

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.8 ஆக பதிவு

அங்காரா: துருக்கி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு துருக்கியில் உள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது. … Read more

கியாஸ் பங்கில் எரிவாயு நிரப்பிவிட்டு பணத்தை பெண் ஊழியர் கையில் கொடுக்காமல் தூக்கி எரிந்த கார் உரிமையாளர்!

சீனாவில் கியாஸ் பங்க் ஒன்றில் எரிவாயு நிரப்பியதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கார் உரிமையாளர் ஒருவர் தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பங்கிற்கு வந்த காரில் எரிவாயு நிரப்பும் பணியில் அந்த பெண் ஈடுபடுகிறார். பின்னர் பணம் பெறுவதற்காக உரிமையாளர் அருகில் சென்ற போது, அவர் அந்த பணத்தை கையில் கொடுக்காமல் தரையில் தூக்கி வீசுகிறார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், கண்களில் கண்ணீருடன் கீழே சிதறிக் கிடந்த பணத்தை ஒவ்வொன்றாக எடுக்கிறார். … Read more

ஆஸ்திரேலியாவில் சுறா கடித்துக்குதறியதில் சிறுமி பலி..!

சிட்னி, ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் ஸ்வான் என்கிற மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் டால்பின்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் இங்கு ஜெட் ஸ்கை என்று அழைக்கப்படும் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெர்த் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் ஜெட் ஸ்கை சவாரியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆற்றில் கூட்டமாக டால்பின்களை பார்த்த உற்சாகத்தில் அந்த சிறுமி … Read more

கேம் விளையாட போன் கொடுக்காதிங்க… ஒரே இரவில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்த சிறுவன்!

Bizarre Viral News: இன்றைய காலத்தில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகமாக உள்ளது. சிறு குழந்தைகள் அடம்பிடித்து வீடியோக்களைப் பார்க்கவும், போனில் கேம் விளையாடவும் பெற்றோர்களிடம் போனை கேட்கின்றனர், அதற்கும் பெற்றோர்கள் எளிதாக அவர்களிடம் போனை கொடுப்பதும் இப்போது இயல்பாகிவிட்டது.  அந்த வகையில், அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது 6 வயது மகன் தூங்கச்செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னாடி, செல்போனை கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் ஒருநாள் இவரின் இந்த பழக்கம் அவரை திடுக்கிட வைத்தது. செல்போனில் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (79) துபாயில் நேற்று காலமானார். அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுகிறது. 1943 ஆகஸ்ட் 11-ல் டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். அவரது தாத்தா ஆங்கிலேயர் ஆட்சியில் வரி வசூல் அலுவலராகவும், அவரது தந்தை சையது அதிகாரியாகவும் பணியாற்றினர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது டெல்லியில் இருந்து கராச்சிக்கு முஷாரப் குடும்பம் இடம்பெயர்ந்தது. லாகூர் பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்ற முஷாரப், பின்னர் இங்கிலாந்து ஸ்வின்டனில் உள்ள பாதுகாப்புத் துறை … Read more

சீனாவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்து.. 16 பேர் உயிரிழப்பு.!

சீனாவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். ஹூனான் மாகாண தலைநகர் சாங்ஷாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. கார்கள், லாரிகள் என 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இதில் பல வாகனங்கள் … Read more