சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் பாராட்டு

வாஷிங்டன், அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை கைவிட்டு … Read more

சீனாவின் உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..!

உளவுபார்க்க ஏவப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் பலூனை அட்லாண்டிக் கடல்பரப்பில் ஜெட் போர் விமானங்கள் மூலமாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜஸ்டின், அமெரிக்க மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இறையாண்மை மீறல்களுக்கு தக்க விதமாக பதிலடி தரப்படும் என்றும் கூறினார். கடலில் விழுந்த அதன் பாகங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. அந்த பலூன் அமெரிக்காவின் ஏவுகணை மையத்தை உளவுபார்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே லத்தீன் அமெரிக்கா மீது இரண்டாவது சீனா … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.84 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

உளவு பலூன் சர்ச்சை: சீன பயணத்தை ரத்து செய்தார், அமெரிக்க வெளியுறவு மந்திரி

வாஷிங்டன், உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனா செல்ல திட்டமிட்டிருந்தார். இருநாடுகளின் உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்ட பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை என்பதால் ஆண்டனி பிளிங்கனின் சீன பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக … Read more

அட்லாண்டிக் பெருங்கடலில் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் ராட்சத உளவு பலூன் பறப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பலூனை சுட்டு வீழ்த்துவதற்கு ஒப்புதல் அளித்தார் என்றும் இராணுவ அதிகாரிகளின் ஆதரவுடன் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி … Read more

ஒருவழியாக பலூனை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா… அடுத்தது என்ன?

சீனாவின் ராட்சத பலூன் அமெரிக்காவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதனை அந்நாட்டினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.  அந்நாட்டின் கிழக்கு கடற்கரையில் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது.  இந்த வார தொடக்கத்தில், வட அமெரிக்கா முழுவதும் உள்ள ராணுவ தளங்களில் சீனாவின் ராட்சத பலூன் உளவு பார்த்ததாக அமெரிக்கா கூறியது. “இந்த பலூனை சுட்டு வீழ்த்திய சம்பவத்தின் மூலம், அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழு … Read more

இந்திய ரூபாயை வர்த்தகத்திற்காக பயன்படுத்துவது இலங்கையின் கடன் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதிதான் – இலங்கைத் தூதர்

இந்திய ரூபாயை வர்த்தகத்திற்காக பயன்படுத்துவது இலங்கையின் கடன் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்று அந்நாட்டு தூதர் மிலிந்தா மொரகடா விளக்கம் அளித்துள்ளார். இந்திய ரூபாயின் மூலமாக இலங்கை தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போது உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா இலங்கை அரசுக்கு 3 புள்ளி 9 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வேறு நிதி அமைப்புகளின் நிதி கிடைக்கவும் இந்தியா துணை நின்றதாகவும் … Read more

சிலியில் பயங்கர காட்டுத் தீ: 13 பேர் பரிதாப பலி | Terrible forest fire in Chile kills 13 people

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாண்டியாகோ-சிலி நாட்டில் 150க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி, 13 பேர் பலியாகியுள்ளனர். தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் தகிப்பதால், பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால், நாடு முழுதும் 150க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இங்கு, 34 ஆயிரத்து 600 ஏக்கர் … Read more

ஒரு கையில் குர்ஆன்..மறு கையில் அணுகுண்டு..தாலிபான் தலைவர் பேச்சு.!

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் … Read more