இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் ரொட்டியை தயாரித்து உட்கொண்ட பில்கேட்ஸ்!

அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் ரொட்டி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இளம் சமையல் கலைஞரான எய்டன் பெர்நாத்துடன் இணைந்து தனது வீட்டில் ரொட்டி தயாரித்து உட்கொண்டார். எய்டன் பெர்நாத் பீகார் வந்திருந்தபோது, கோதுமை விவசாயிகள் மற்றும் கேண்டீன்களில் ரொட்டி தயாரிக்கும் பெண்களை சந்தித்ததாகவும், சுவையான ரொட்டி தயாரிப்பதை அப்போது கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். Source link

Super Cows: சீனாவின் ‘பால் புரட்சி’! கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீன தொழில்நுட்பம்

சீன விஞ்ஞானிகள் ‘சூப்பர் பசுக்கள்’ என்று அழைக்கப்படும் குளோனிங் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பசுக்கள் தங்கள் வாழ்நாளில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு இனங்களை சீனா சார்ந்திருப்பதை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பசுக்கள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் குளோபல் டைம்ஸின் கூற்றுப்படி, சீனாவின் கறவை மாடுகளில் 70 சதவீதம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன விஞ்ஞானிகள் அதிக அளவு பால் … Read more

அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன 'உளவு' பலூன்: அமெரிக்கா கண்டனம்

மோண்டானா: தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன ‘உளவு’ பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து வருவதைக் கண்டோம். நிச்சயம் அது ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் பாதுகாப்புக்காக அந்த பலுனை நாங்கள் சுடவில்லை. பலுனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ” என்று தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்புத் துறை … Read more

நாஜி படைகளை தடுத்து நிறுத்தி, வீரமரணம் அடைந்த ரஷ்ய தளபதியின் நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி..!

இரண்டாம் உலகப் போரில், ஹிட்லரின் நாஜி படைகளை, சோவியத் ராணுவம் வீழ்த்தி வாகை சூடியதன் 80ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ரஷ்யாவின் வோல்கோ கிராட் நகரில் கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் போரில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ரஷ்ய தளபதி ஸ்டாலின் இறந்தபிறகு இந்த நகருக்கு ”வோல்கோ கிராட்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாஜி படைகளை தடுத்து நிறுத்தி, வீரமரணம் அடைந்த ரஷ்ய தளபதியின் … Read more

தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம்: புத்த மதத் தலைவர்கள் எதிர்ப்பு| Rulership for Tamils: Buddhist leaders protest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கும் அரசியல் சாசனத்தின் 13 ஏ பிரிவை செயல்படுத்த, புத்த மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ௧௯௮௭ல் இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சாசனத்தில் … Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இன்ஜினில் புகை வந்ததால் அபுதாபியில் தரையிறக்கம்..!

அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜின் ஒன்றில் புகை வந்ததையடுத்து விமானம் மீண்டும் அபுதாபியில் தரையிறக்கப்பட்டது. IX348 விமானம் 184 பயணிகளுடன் இன்று கோழிக்கோட்டிற்கு புறப்பட்டது. ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது விமானத்தின் என்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு புகை வந்தது. இதனையடுத்து விமானம் பாதுகாப்பாக அபுதாபி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்| Calicut-bound Air India Express flight lands in Abu Dhabi after flames detected mid-air

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800’ என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி கிளம்பியது. விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே கிளம்பி 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, ஒரு … Read more

டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால் வெண்பனி போர்த்தியதுபோல் ரம்மியமாக காட்சியளிக்கிறது ஆஸ்டின் நகரம்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால் ஆஸ்டின் நகரம் வெண்பனி போர்த்தியதுபோல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. பனிப்புயல் காரணமாக டெக்சாஸ், ஆர்கன்சாஸ், டென்னசி ஆகிய மாகாணங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சாரம் தடைப்பட்டது. கடும்பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடுகள், மரங்கள், வாகனங்கள் என காணும் இடமெல்லாம் வெண்பனி மூடி காட்சியளிக்கின்றன. Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.79 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 56 லட்சத்து 57 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 9 லட்சத்து 1 ஆயிரத்து 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

அமெரிக்காவின் நாசா தயாரித்துள்ள மின்சார விமானம் இந்த ஆண்டு அறிமுகம்

கேம்பிரிட்ஜ்: அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது. இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயா ரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்ககூடியது. இந்த விமானத்துக்குஎக்ஸ்-57 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இருக்கைகள் கொண்ட சிறிய விமானமாக எக்ஸ்-57 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன. இவற்றை தேவையற்ற நேரத்தில் மடித்துக் கொள்ள முடியும். வழக்கமான … Read more