உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்… PoK பகுதியில் தீவிரமடையும் போராட்டம்!

பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. மக்கள் உணவின்றி தவிக்கும் நிலையில், சுத்தமான குடிநீரும் கூட கிடைக்காத அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. அதன் தாக்கம் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதாவது PoK பகுதியிலும் காணப்படுகிறது. அங்கு முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால்,  … Read more

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் போராட்டம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

லண்டன்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக விலைவாசி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இரு பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தற்போது ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், … Read more

பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்..!

பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் இரவு நேரத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், காஸா பகுதியிலிருந்து தங்களது நாட்டிற்குள் ஏவப்பட்ட ராக்கெட்டை வழிமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவிலிருந்து மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சைரன் தங்களுக்கு ஒலித்ததால் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ராக்கெட் வீச்சில் கட்டடங்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியான நிலையில் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட நிக்கி ஹாலே திட்டம்!| Indian-American Republican leader Nikki Haley to run for President?

வாஷிங்டன் : அடுத்தாண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, 51, திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில்அவர் களமிறங்கவுள்ளதாகவும், வரும், 15ல் பிரசாரத்தை துவங்கவுள்ளதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில்செய்திகள் வெளியாகி உள்ளன. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, ஏற்கனவே … Read more

இந்திய விண்வெளி வீரர் நாசா மையத்துக்குச் சென்று பயிற்சி பெறுவார் என அறிவிப்பு..!

2024ம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் விஞ்ஞானிகள் இத்திட்டத்தில் இந்திய நிறுவனத்தை இணைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி வீரர் ஒருவர் நாசா தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிக்கு நாசா விண்வெளி மையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து பல்வேறு கூட்டு திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், அதில் நிலவுக்கு வர்த்தக முறையில் மனிதரை அனுப்பி வைக்கும் திட்டமும் … Read more

புது காதலியுடன் பப்பிற்கு செல்ல… குழந்தையை அலெக்ஸாவுடன் விட்டுசென்ற தந்தை – ஓராண்டு சிறை

ஐந்து வயது மகளை அமேசான் அலெக்ஸா சாதனத்துடன் தனியாக வீட்டில் விட்டுவிட்டு, காதலியுடன் பப்பிற்கு சென்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த பெண் குழந்தையின் அடையாளம் வெளிவர கூடாது என்பதற்காக அந்த தந்தையின் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை.  பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான அந்த நபர், போவிஸ் நகரில் உள்ள பில்த் வெல்ஸ் பகுதியில் இருக்கும் அவரது காதலியின் வீட்டில் அவரது குழந்தையை தூங்க வைத்துவிட்டு, அமேசான் அலெக்ஸா அருகில் இருக்க அவர்கள் ப்பபிற்கு சென்றுள்ளனர். … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில், எஃப்பிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். துணை அதிபராக பதவி வகித்த காலகட்டத்தைச் சேர்ந்த ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. டெலவரில் ஜோ பைடனுக்கு இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், டெலவேர் மாகாணத்திலுள்ள ஜோ பைடனின் தனியார் அலுவலகம் மற்றும் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ.அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ரகசிய … Read more

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். ஷேக் ரஷீத் அகமது கைது: பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரது வாகனத்தில் இருந்து மது பாட்டிலும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஷேக் ரஷீத் அகமது போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதுக்கான … Read more

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன ஆபத்தான கதிர்வீச்சு கேப்சூல் ஒருவாரத்துக்குப் பின்னர் மீட்பு..!

ஆஸ்திரேலியாவில் மாயமான கதிர்வீச்சு அபாயமுள்ள கேப்சூலை அந்நாடு ஒருவாரம் கழித்து மீட்டது. கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் தோல் சேதம் மற்றும் கதிர்வீச்சு நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் காப்ஸ்யூல் காணாமல் போனதாக தகவல் வெளியானதும் உடனடியாக தேடுதல் பணி தொடங்கப்பட்டது. இறுதியில் சிறப்பு டிடெக்டர்கள் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டது. Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.77 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,763,229 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more