2024 ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை : பிரான்சுக்கு உக்ரைன் வலியுறுத்தல்| Ban on Russia to participate in 2024 Olympics: Ukraine urges France

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: அடுத்தாண்டு (2024) பிரான்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீர்ர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் , பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ல் நடக்கவுள்ளது. இதற்கு முன், 1900, 1924ல் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்தும் 2வது நகரம் என்ற பெருமை பெற உள்ளது. தற்போது உக்ரைன் மீது … Read more

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 28 பேர் பலி; பலர் காயம்

பெஷாவர்: பாகிஸ்தானில் மசூதி ஒன்றி நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியின் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகினர்; 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பினால் மசூதியின் கட்டிடம் சரிந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் பலர் போலீஸார் என்று அறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு … Read more

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நிலநடுக்கம்.. கட்டிடத்தில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம்..!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்சு என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 50 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஜின்ஜியாங் தலைநகர் உரும்கியில் நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார மின்விளக்குகள் அசைந்தன. ஒரு கட்டிடத்தில் இருந்த மக்கள் நில அதிர்வை உணர்ந்து, அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கத்தால் பாலங்கள், சுரங்கப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களில் சேதம் ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு … Read more

பாகிஸ்தான் பெஷாவர் மசூதியில் குண்டுவெடிப்பு – 28 பேர் பலி; 150 பேர் காயம்!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம் போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மசூதி கட்டடத்தின் ஒரு பகுதி … Read more

பாகிஸ்தானில், மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் படுகாயமடைந்தனர். காவலர் குடியிருப்பு அருகில் இருக்கும் அந்த மசூதியில், இன்று மதியம் தொழுகைக்காக சுமார் 260 பேர் கூடியிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பில் மசூதியின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 28 பேர் பலியான நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் … Read more

பாகிஸ்தான் பெஷாவரில் மசூதியில் நடந்த தற்கொலை தாக்குதல்! 27 பேர் பலி!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், கூடுதலால்க தீவிரவாதம் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் குண்டுவெடிப்பு பகுதியில் உள்ள போலீஸ் லைன் பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மசூதியில் தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு ஃபிதாயீன் தாக்குதல் என்று நம்பப்படுகிறது. செய்தி நிறுவனமான AFP … Read more

ஏவுகணையை வைத்து புதின் என்னை மிரட்டினார்: போரிஸ் ஜான்சன்

லண்டன்: ஏவுகணைகளை வைத்து புதின் தன்னை மிரட்டுவதாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன்னர், ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன் பிபிசி நிறுவனத்திற்கு சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருக்கிறார்.அதில் புதின் குறித்து அவர் கூறிய தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் போரிஸ் ஜான்சன், “உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும், நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் … Read more

சூரியனை விட 57,000 கோடி மடங்கு பிரகாசமான காந்த நட்சத்திரம்! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு மர்மமான பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனை விட பல மில்லியன் மடங்கு பிரகாசமாக காணப்படுகிறது. பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு வகை சூப்பர்நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57 ஆயிரம் கோடி மடங்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அது வெகு தொலைவில் காரணமாக அது நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அதிலிருந்து வெளிவரும் ஆற்றல் மிகவும் வலிமையானது, அது எதையும் எரித்து சாம்பலாக்கும். விஞ்ஞானிகள் … Read more

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நாடு திரும்பிய தூதரக அதிகாரிகள்..!

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூதரக ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த வெள்ளிக்கிழமை அஜர்பைஜான் தூதரகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில், தூதரக பாதுகாப்பு பிரிவின் தலைவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தனிப்பட்ட பிரச்சனைகளால் தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகள், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிற்கு சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more