பாகிஸ்தான் பெஷாவரில் மசூதியில் நடந்த தற்கொலை தாக்குதல்! 27 பேர் பலி!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், கூடுதலால்க தீவிரவாதம் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் குண்டுவெடிப்பு பகுதியில் உள்ள போலீஸ் லைன் பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மசூதியில் தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு ஃபிதாயீன் தாக்குதல் என்று நம்பப்படுகிறது. செய்தி நிறுவனமான AFP … Read more

ஏவுகணையை வைத்து புதின் என்னை மிரட்டினார்: போரிஸ் ஜான்சன்

லண்டன்: ஏவுகணைகளை வைத்து புதின் தன்னை மிரட்டுவதாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன்னர், ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன் பிபிசி நிறுவனத்திற்கு சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருக்கிறார்.அதில் புதின் குறித்து அவர் கூறிய தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் போரிஸ் ஜான்சன், “உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும், நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் … Read more

சூரியனை விட 57,000 கோடி மடங்கு பிரகாசமான காந்த நட்சத்திரம்! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு மர்மமான பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனை விட பல மில்லியன் மடங்கு பிரகாசமாக காணப்படுகிறது. பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு வகை சூப்பர்நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57 ஆயிரம் கோடி மடங்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அது வெகு தொலைவில் காரணமாக அது நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அதிலிருந்து வெளிவரும் ஆற்றல் மிகவும் வலிமையானது, அது எதையும் எரித்து சாம்பலாக்கும். விஞ்ஞானிகள் … Read more

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நாடு திரும்பிய தூதரக அதிகாரிகள்..!

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூதரக ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த வெள்ளிக்கிழமை அஜர்பைஜான் தூதரகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில், தூதரக பாதுகாப்பு பிரிவின் தலைவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தனிப்பட்ட பிரச்சனைகளால் தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகள், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிற்கு சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பதற்றம்: அமைதிப் பேச்சுக்கு போப் வலியுறுத்தல்

ரோம்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போப் பிரான்சிஸ் ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “இஸ்ரேல் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து நான் கவலை கொள்கிறேன். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புனித பூமியான ஜெருசலேமிலிருந்து வரும் செய்திகள் என்னை மிகவும் … Read more

பாகிஸ்தானில் ஏறியில் படகு கவிழ்ந்து விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து  விபத்துக்குள்ளான சிறார்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், கோஹாட் மாவட்டத்தில் உள்ள தாண்டா அணை ஏரியில் சிறுவர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது நிலைதடுமாறிய படகு திடீரென கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி 17 சிறார்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.   Source link

ஈரான் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரித்தளிக்கும் தொழிற்சாலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

ஈரான் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரித்தளிக்கும் தொழிற்சாலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்பஹான் அருகே உள்ள அந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உயிர் சேதமோ அல்லது மிகப்பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்த வந்த ட்ரோன்களில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மேலும் 2 ட்ரோன்கள் பாதுகாப்பு பொறிகளில் சிக்கி வெடித்ததாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தாக்குதலை நடத்தியது யார் என தெரியாத … Read more

மெக்சிகோவில் இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு.. 8 பேர் பலி!

மெக்சிகோவில் இரவு விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். ஜெரெஸ் நகரில் உள்ள “எல் வெனாடிடோ” இரவு கேளிக்கை விடுதிக்கு 2 வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், விடுதி ஊழியர்கள், இசைக் கலைஞர்கள், வாடிக்கையாளர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர். இதில், சம்பவ இடத்திலே ஆறு பேர் நிலைகுலைந்து உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் பலியாகினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் மேலும், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more