இந்தியா மீது போர் தொடுத்து பாடம் கற்றுக்கொண்டோம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புலம்பல்| Lesson learned from waging war on India: Pakistan PM Shefaz Sharif laments

அபுதாபி: ”இந்தியா மீது மூன்று முறை போர் தொடுத்து, நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம். இந்த போர்கள் எங்கள் மக்களுக்கு வறுமை, துன்பத்தை கொண்டு வந்து சேர்த்து விட்டன. எனவே இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம்,” என, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாக்., … Read more

உலகின் வயதான நபர் லூசில் ராண்டன் 118வது வயதில் மரணம்: இரு பெருந்தொற்றுகளில் உயிர் பிழைத்தவர்

பாரிஸ்: உலகின் வயதான நபராக அறியப்பட்டுவந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 118. அவரது மறைவை அவருடைய செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். லூசில் ராண்டன், டோலுன் நகரில் அவர் தங்கியிருந்த இறுதி நாட்கள் சிகிச்சை மையத்தில் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா தெரிவித்தார். இது குறித்து செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா, “லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை … Read more

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்க பீரங்கிகளை வழங்கும்படி உக்ரைன் அரசு நட்பு நாடுகளுக்குக் கோரிக்கை!

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்க பீரங்கிகளை வழங்கும்படி உக்ரைன் அரசு நட்பு நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. பீரங்கிகள் கிடைத்தால் போரின் போக்கையே அது மாற்றியமைக்கக் கூடும் என்றும் உக்ரைன் கோரியுள்ளது. இதனைப் பரிசீலிப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. புதிதாகப் பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சரின் செயல்திட்டத்தில் இக்கோரிக்கை முதன்மைப்படுத்தப்படும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் சிதிலமடைந்த நிப்ரோவில் இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

நேபாள விமான விபத்து: மேலும் 2 உடல்கள் மீட்பு| Nepal plane crash: 2 more bodies recovered

காத்மண்டு: நேபாள விமான விபத்தில் இதுவரை ௬௮ உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ௭௧ ஆக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரான பொக்காராவுக்கு ‘யெட்டி’ ஏர்லைன்ஸ் விமானம் ௬௮ பயணியர் மற்றும் நான்கு விமான ஊழியர்களுடன் ஜன. ௧௫ல் பறந்தது. தரை இறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் திடீரென தீப்பிடித்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் விழுந்து … Read more

திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகள் துண்டிப்பு: தலிபான்கள் கொடூர தண்டனை

காபூல்: திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரின் கைகளை தலிபான்கள் பொது மக்கள் முன்னிலையில் துண்டித்த கொடூரம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. 1990களில் இருந்தது போல் எங்கள் ஆட்சி இருக்காது என்று தலிபான்கள் அறிவித்தாலும் அங்கு எதுவும் மாறவில்லை. பெண் கல்விக்கு தடை, பெண்கள் வேலை பார்க்கத் தடை, ஆண்கள் ஸ்டைலாக தலைமுடி வெட்டிக் கொள்ள தடை. தாடியை எடுத்தால் தண்டனை. இசை, சினிமா, கேளிக்கைக்கு தடை. … Read more

சுரங்க விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 20 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் கைது!

ஜெர்மனியில் போராட்டம் நடத்திய 20 வயது இளம்பெண் கிரேட்ட துன்பர்க்கை போலீசார் கைது செய்தனர். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட கிரேட்டா துன்பர்க் மற்றும் போராட்டக்காரர்கள் சுரங்கத்தின் ஆபத்தான இடத்தில் நின்று போராட்டம் நடத்துவதாகக் கூறிய போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.  Source link

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மக்கி சர்வதேச தீவிரவாதி என ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு!

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மக்கி என்பவனை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச தீவிரவாதி என்று அறிவித்துள்ளது. அவருடைய வங்கிக் கணக்குகளை முடக்கவும், பயணங்களுக்குத் தடை விதிக்கவும் இந்தத் தடை உதவும். லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையத்தின் மைத்துனரான இவன்மீது தீவிரவாதத்துக்கு நிதித் திரட்டியது, இளைஞர்களை வன்முறைக்கு மூளைச் சலவை செய்து பயிற்சி அளித்தது இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களைத் திட்டமிட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் … Read more

முதல் உலகப்போரில் அமெரிக்கா இழந்ததைவிட அதிக வீரர்களை இழந்த ரஷ்யா..!

முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்ததை விட உக்ரைனுடனான போரில் ரஷ்யா அதிக வீரர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு வருடமாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா ஒரு லட்சத்து 17 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், உக்ரைன் போரில் இதுவரை … Read more

இங்கிலாந்தில் 70 பயணிகளுடன் சென்ற டபுள் டக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்து..!

தென்மேற்கு இங்கிலாந்தில், 70 பயணிகளுடன் சென்ற டபுள் டக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கன்னிங்டன் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பனி உறைந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Source link

போதைப்பொருள் சாகுபடியை கண்காணிக்க AI! ஆஃப்கனில் செயற்கை தொழில்நுட்ப புரட்சி

லண்டன்: ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் கவலைகளை அதிகரித்த நிலையில், அதற்கான தீர்வை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பெற முடிவு செய்யபப்ட்டுள்ளது. 2022 ஏப்ரலில் ஓபியம் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான பயிர்களை பயிரிடுவதற்கு தலிபான்கள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   சட்டவிரோதமாகப் பயிரிடப்படும் பயிர்களைக் கண்காணிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் திட்டத்தை உருவாக்க ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான … Read more