அழிவின் விளிம்பில் உள்ள 43 பச்சைக் கடல் ஆமைகள் வேட்டையாடுபவர்களிடம் இருந்து மீட்ட கடற்படையினர்..!

இந்தோனேசியாவின் பாலி தீவில், அழிவின் விளிம்பில் உள்ள 43 பச்சை கடல் ஆமைகளை, வேட்டையாடுபவர்களிடம் இருந்து கடற்படை அதிகாரிகள், உயிருடன் மீட்டனர். கிலிமானுக் கடற்பகுதியில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட வேட்டையாடுபவர்கள், ஆமைகளை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஆமைகளை மீட்ட கடற்படையினர் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், அவை மீண்டும் கடலில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுதல், மீன்பிடி சாதனங்களில் சிக்குவது போன்ற காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக பச்சை கடல் ஆமைகளின் எண்ணிக்கை சரிந்து … Read more

நேட்டோவில் நிச்சயம் இணைவோம்; உக்ரைன் அறிவிப்பால் ரஷ்யா அதிர்ச்சி.!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதன் முறையாக கடந்த … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் வரிமோசடி; 1.6 மில்லியன் டாலர் அபராதம்.!

15 ஆண்டுகளாக வரி அதிகாரிகளை ஏமாற்றியதற்காக ட்ரம்பின் நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 15 ஆண்டுகால வரி மோசடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் அவரது வயது வந்த குழந்தைகளான டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர் கடன்கள் மற்றும் காப்பீட்டில் பணத்தை மிச்சப்படுத்த தனது நிகர மதிப்பு மற்றும் அவரது நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தியதாக குற்றம் சாட்டி 250 மில்லியன் டாலர் சிவில் வழக்கை எதிர்கொண்டுள்ளனர். … Read more

போன்கள் முதல் ஏவுகணைத் தயாரிப்புவரை.. 10 லட்சம் டன் அளவிலான அரியவகை உலோகக்கூறுகள் சுவீடனில் கண்டுபிடிப்பு

மின்சார வாகனங்கள்,ஸ்மார்ட்போன்கள் முதல் இலக்கை நோக்கித் தாக்கும் அதிநவீன ஏவுகணைத் தயாரிப்புவரை பயன்படுத்தப்படும் சுமார் 10 லட்சம் டன் அளவிலான அரியவகை உலோகக்கூறுகள் சுவீடன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து சுமார் 1000 km தொலைவில் , அந்நாட்டின் அரசு சுரங்க நிறுவனமான LKAB யால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த உலோகக்கூறுகள் தான் ஐரோப்பாவின் தற்போதைய மிகப்பெரிய இருப்பாகும். இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில் முறையான சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற்று இவை சந்தைக்கு வர 10 முதல் 15 … Read more

பாலியல் வாழ்க்கை பற்றி விசாரித்த பாகிஸ்தான் அதிகாரிகள்! இந்தியப் பெண்ணுக்கு கொடுமை

புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டு தூதரக உயரதிகாரிகள் மீதான இந்தியப் பெண்ணின் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. விசா தொடர்பான சந்திப்பின் போது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், அந்தப் பெண்ணிடம் பாலியல் வாழ்க்கை மற்றும் திருமண நிலை பற்றி கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடியை விமர்சித்து எழுத வேண்டும் என்றும் அந்த பாகிஸ்தான் ஹைகமிஷன் அதிகாரிகள் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியுள்ளதான புகார் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  அபாசமாக பேசிய பாகிஸ்தான் … Read more

தலிபான்கள் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட முதல் நவீன கார் ’மடா 9’

காபூல்: ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து ஒன்றரை வருடங்களான நிலையில் நவீன கார் ஒன்றை தலிபான்கள் உத்தரவின்பேரில் பொறியியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் உள்ள டெக்னிக்கல் வெகேஷனல் என்ற நிறுவனத்தின் 30 பேர் கொண்ட இன்ஜினியர் குழு நவீன கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைபற்றி ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் உள்நாட்டு கார் இதுவாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மடா 9 (Mada 9) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் புகைப்படத்தை, … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள்: விசாரணைக்கு உத்தரவு| US Special Counsel To Probe Biden’s Handling Of Classified Documents

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், கடந்த 2009 முதல் 2017 வரை அந்நாட்டின் துணை அதிபராக பதவி வகித்திருந்தார். அந்த காலக்கட்டத்திலான அரசின் ரகசிய ஆவணங்கள் தற்போது ஜோ பைடனின் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் … Read more

நடப்பு ஆண்டில் பெரும் வறட்சியை எதிர்கொள்ளும் கென்யா

நைரோபி: நடப்பு ஆண்டில் கென்யாவின் 15 மாகாணங்களில் சுமார் 1 கோடி மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன. கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது அவற்றின் முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆய்வு முடிவுகளின் விவரம்: “கென்யாவில் வரும் பிப்ரவரி – மே மாதங்களில் 15 மாகாணங்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்திக்க உள்ளன. இதனால் 1 கோடி மக்கள் வரை பட்டினியில் சிக்கலாம். … Read more

பொருளாதார சிக்கல் எதிரொலி; ராணுவத்தை குறைக்கும் இலங்கை.!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்தாண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதாரா நெருக்கடியால் மக்கள் வீதியில் இறங்கி போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார். நெருக்கடியை சந்தித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டில் மட்டும் சுமார் 32 ஆயிரத்து 800 நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. எரிபொருள் தேவை, … Read more