கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள மான்ட்கோமெரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் என்ஜினுக்குள் உறிஞ்சப்பட்ட விமானக் குழுவின் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், இந்த அசாதரணமான விபத்து சனிக்கிழமை மாலை 3 மணிக்கு (உள்ளூர் நேரம்) நடந்தது. டல்லாஸில் இருந்து வந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. விமான நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அதன் இன்ஜின் ஒன்று இயங்கிக் கொண்டிருந்ததால், அதை அறியாத தொழிலாளி, அதன் அருகில் சென்றுள்ளார். அப்போது … Read more

ஐஸ் ஹாக்கி அரங்கம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீச்சு

ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனின் டிரஸ்கிவ்கா நகரிலுள்ள ஐஸ் ஹாக்கி அரங்கம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். அரங்கில், கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினார். ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி போன்ற போட்டிகள் நடத்தப்படும் ஐந்து ஐஸ் அரங்கங்களை இதுவரை ரஷ்ய படைகள் தாக்கி தரைமட்டமாகியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. Source link

சீனர்களுக்கு மட்டும் கட்டுப்பாடா? சீனா கொந்தளிப்பு| “Entry Restrictions Targeting Only Chinese Travellers”: Beijing Hits Out

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: சீனர்களை குறிவைத்து மட்டும் பல்வேறு நாடுகள் கோவிட் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சீனா, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா காரணமாக, அந்நாட்டில் கோவிட் பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. இதனால், அந்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் … Read more

கொரோனா பாதிப்பு: உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு சீனாவுக்கு WHO வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு, சீன அரசை உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது. சீனாவில், கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், கடந்த மாதம் 7-ந் தேதி முதல், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்த நிலையில், கடந்த சில நாட்களாக, பாதிப்புகள், உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியது. ஷாங்காய் நகர மருத்துவமனைகளில் படுக்கைகள் நிறைந்ததால், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை … Read more

எங்களுக்கு மட்டும் பயணக் கட்டுப்பாடா..? – வார்னிங் கொடுத்த சீனா!

சீனப் பயணிகளை மட்டும் குறிவைத்து பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் … Read more

பாகிஸ்தானில் போட்டி அரசு அமைத்த பயங்கரவாதிகள்| TTP challenges Pakistan’s sovereignty, declares own government

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்: பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராக தஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்னும் பயங்கரவாத அமைப்பு போட்டி அரசு அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கரவாதம் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததன் அடிப்படையில் அவரது பதவி பறிபோனது. இதனையடுத்து தற்போது ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். இந்த நிலையில், தற்போதைய அரசுக்கு எதிராக போட்டி … Read more

Green Funeral மூலம் 'இறந்த மனித உடலை உரமாக்கலாம்' எப்படி? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

Green Funeral Embellishments: இயற்கை அடக்கம் (Green Funeral) இது கேட்பதற்கு சற்று விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால் இந்த வார்த்தை தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவான வார்த்தையாகவே மாறிவிட்டது. இனி நமது வீட்டு தோட்டங்களில் நம்மை விட்டு பிரிந்தவர்களை உரமாக வைத்து நம்முடனே வளர்க்கலாம். இது எப்படி சாத்தியமாகி இருக்கிறது இந்த தொகுப்பில் பார்ப்போம்.  பொதுவாக ஒரு மனிதன் இறக்கும்போது அந்த உடலை தகனம் செய்வது என்பது வழக்கமான நடைமுறை. அதற்காக எரியூட்டுதல் அல்லது புதைத்தல் … Read more

எங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைப்பதா? – கரோனா கட்டுப்பாடுகளுக்கு சீனா கொந்தளிப்பு

பீஜிங்: சீனாவில் சமீப நாட்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்துவரும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கெடுபிடி விதித்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் சீன பயணிகளுக்கு மட்டும் இந்தக் கெடுபிடியை விதித்துள்ளன. இந்நிலையில், இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் … Read more

ஒரே நேரத்தில் 2 வகையான புற்றுநோயை எதிர்கொள்ளும் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா, 1978 மற்றும் 1990-களுக்கு இடையில் 9 விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்தார். தற்போது 66 வயதாகும் மார்டினா, ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறினார். இந்நிலையில், சமீபத்தில் உடல் பரிசோதனை செய்ததில், இவருக்கு தொண்டை மற்றும் மார்பகத்தில் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தது.  … Read more