உக்ரைன் அதிபர், பிரதமர் மோடி மீண்டும் தொலை பேசியில் பேச்சு| President of Ukraine, Prime Minister Modi spoke on the phone again

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீண்டும் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச் மற்றும் அக்டோபரில் இந்திய பிரதமர் … Read more

பெண்களின் உரிமையை மதியுங்கள்: ஆப்கனுக்கு கத்தார் அறிவுரை

கத்தார்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செய்வதற்கான உரிமையை மதியுங்கள் என்று தலிபான்கள் அரசிடம் கத்தார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்கனில் பல்கலைகழகங்களில் பயில பெண்களுக்கு தலிபான்கள் அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மீண்டும் சர்ச்சையான உத்தரவை தலிபான்கள் அறிவித்தனர். ஆப்கனில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பெண்கள் ஊழியர்களாக இருப்பதற்கு தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆப்கனின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இந்த … Read more

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்; சீன அதிபர் உத்தரவு.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா … Read more

நேபாள பிரதமராக பதவியேற்றார் பிரசண்டா| Prasanda was sworn in as the Prime Minister of Nepal

காத்மாண்டு: நேபாள அரசியலில் ஒரே நாளில் நடந்த திடீர் திருப்பங்களில், எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா, 68, அந்த நாட்டின் பிரதமராக இன்று(டிச.,26) பொறுப்பேற்றார். நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், 87 ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக, கூட்டணி கட்சிகள் மற்றும் … Read more

உக்ரைன் போர் | “பேச்சுவார்த்தையை எதிர்ப்பது நாங்கள் அல்ல…” – ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த உக்ரைன் – ரஷ்யா போர், வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து வருகிறது. ”எங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வரை உக்ரைனிலிருந்து வெளியேற மாட்டோம்” என்று ரஷ்யாவும், “ரஷ்ய ராணுவத்தை எங்கள் பகுதியிலிருந்து அகற்றும் வரை ஓயமாட்டோம்” என்று உக்ரைனும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், போர் காரணமாக அரங்கேறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கவலை … Read more

ஆஸ்திரியாவில், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 10 பேர் மாயம்..!

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 10 பேர் மாயமாகினர். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்கை ரிசார்ட்டில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிலர் சிக்கினர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியோரை தேடும் பணிகள் விடியவிடிய நடைபெற்று வருகின்றன.   Source link

கரோனாவுடன் வாழப் பழகும் ஷாங்காய், பீஜிங் மக்கள்: ஊரடங்கு கொள்கையை கைவிட்ட சீனா

பீஜீங்: சீனாவில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும், மக்கள் தங்கள் பணிகளுக்கு செல்வதில் இம்முறை சீனா கடுமை காட்டவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து … Read more

பிலிப்பைன்ஸில் வெள்ள பாதிப்பு – சுமார் 40,000 பேர் வெளியேற்றம்.. 6 பேர் உயிரிழப்பு..!

பிலிப்பைன்ஸில் வெள்ள பாதிப்பால் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மிண்டானோ, ஒசாமிஸ், கிளாரின் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

வடமேற்கு சீனாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கிய 18 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்..!

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கஜகஸ்தான் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நிலத்தடி தங்கச் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென மண் சரிந்ததில் அங்கிருந்த தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். 22 பேர் வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாத காரணத்தால், சீனாவில் சுரங்க விபத்துகள் அடிக்கடி … Read more

சீனாவில் தடை அகற்றம்! சிக்கலில் பாகிஸ்தான்! பேரழிவை ஏற்படுத்தும் அண்டை நாடு

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் சீனாவில் அழிவை ஏற்படுத்தி வருகிறது, கடந்த ஒரு வாரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட்-19 இன் புதிய வகையான BF.7 (Omicron BF.7) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த பேரழிவு, பாகிஸ்தானிலும் பாதிப்பைஇ ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்த கொரோனத் தொற்று வெறும் தொல்லையாக மட்டுமே முடிந்துவிடாமல், மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7 (Omicron BF.7) பாகிஸ்தானுக்கு … Read more