சீன வண்ண ஒளித் திருவிழா.. ஒளியின் மாயாஜாலத்தைக் கண்டுரசித்த பார்வையாளர்கள்..!

சிலி தலைநகர் சாண்டியாகோவில் சீன வண்ண ஒளித் திருவிழா தொடங்கியது. சீனாவிற்கும் – சிலிக்கும் இடையிலான 52 ஆண்டுகால உறவை நினைவுபடுத்தும் விதமாக பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்ண ஒளித்திருவிழாவில் சீன கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டு கைவினைக் கலைஞர்களின் கைவண்ணங்களில் பல வடிவங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்ணைப்பறிக்கும் வண்ண ஒளியில் மின்னிய பொம்மைகள், அலங்காரங்களைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.  Source link

அமெரிக்கா மறைமுக போர் நடத்துகிறது – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: ‘‘உக்ரைன் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், ரஷ்யா மீது அமெரிக்கா மறைமுக போர் நடத்தி வருகிறது’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் … Read more

COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்

நியூடெல்லி: சீனாவில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கோவிட் பரவலானது, முன்னெப்போதையும் விட மிகவும் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீன அரசு வெளியிடும் அதிகாரபூர்வமான தரவுகளுக்கு மாறாக, ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பை, பிரிட்டனைச் சேர்ந்த Airfinity என்ற சுகாதார தரவு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த புதிய கோவிட் அலையினால், சீனாவில் 1.3 முதல் 2.1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்றும் இந்த பகுப்பாய்வு அதிர்ச்சியளிக்கிறது. … Read more

‘ட்ரம்ப் சுவர்’ ஏறிய குஜராத் வாலிபர் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுக்க, முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சி காலத்தில் எல்லையில் பிரம்மாண்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இதை ‘ட்ரம்ப் சுவர்’ என்றே அழைக்கின்றனர். குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் போரிசனா கிரா மத்தைச் சேர்ந்த பிரிஜ்குமார் யாதவ் (32), சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய மனைவி, கைக் குழுந்தையுடன் மெக்சிகோ வந்தார். அங்கு ட்ரம்ப் தடுப்புச் சுவரில் ஏறிய பிரிஜ்குமார் கீழே விழுந்து இறந்தார். அவது குழந்தை, மனைவி … Read more

“பணக்காரனாக இருப்பது வாழ்வை வசதியாக்கும், ஆனால்…” – தாத்தாவாகும் மகிழ்ச்சியில் பில் கேட்ஸ்

வாஷிங்டன்: 2022ம் ஆண்டு தனக்கு முக்கியமான விஷயங்களையும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யத் தேவையான விஷயங்களையும் கொடுத்தது என்று பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களில் ஒருவரான இவர், 2022ம் ஆண்டு குறித்தும் 2023ம் ஆண்டை வரவேற்பது குறித்தும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துள்ளார். “எங்கள் பேரக்குழந்தைகளுக்குத் தகுதியான எதிர்காலம்” என்ற தலைப்பில் எழுதியுள்ள பில் கேட்ஸ் அதில், “2022ம் ஆண்டு தனக்கு முக்கியமான விஷயங்களையும், தனது வாழ்க்கையை … Read more

முதியவர் சுட்டதில் 3 பேர் பலி | 3 killed in shooting by old man

பாரிஸ் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குர்திஷ் சமூகத்தினரின் கலாசார மையம் உள்ளது. இங்கு, நேற்று நுழைந்த 69 வயது முதியவர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில், மூன்று பேர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.தாக்குதல் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேயர் அலெக்சாண்ட்ரா கூறுகையில், ”இந்த தாக்குதலுக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. ஆனால், அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் துருக்கி அரசு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்,” என்றார். பாரிஸ் … Read more

சீனாவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா 5,000 பேர் உயிரிழப்பதால் நிரம்பிய மயானங்கள்| Graveyards full of 5,000 deaths per day in China due to 10 lakh people

பீஜிங், சீனாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், 5,000 பேர் உயிரிழக்கின்றனர். படுக்கை வசதி இன்றி மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மயானங்களில், உடல்கள் குவியல் குவியல்களாக வைக்கப்பட்டுள்ள பரிதாப நிலை உருவாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து, … Read more

வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம் அதிகரிப்பு: சீனாவின் உதவியை நாடிய அமெரிக்கா

வாஷிங்டன், வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்நிலையில், வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவின் உதவியை நாட உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீனா செல்ல திட்டமிட்டுள்ள பிளிங்கென், வடகொரிய ஏவுகணை பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகள் குறித்து சீனாவுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். முன் நிபந்தனைகள் இன்றி இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்பாடு குறித்து பேச தயார் என தெரிவித்த பிளிங்கென், கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதமற்ற நிலையைப் … Read more

500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை – ராஜஸ்தான் முதல்-மந்திரி அறிவிப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பத்லாபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று தொடங்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்லாபூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் குடும்பங்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில் தகுதியுடைய பயனாளர்களுக்கு வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் … Read more

சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. அதே சமயம் கொரோனா பாதிப்புகளை சீன அரசு முறையாக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே சீனாவில் இனி அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை பதிவு செய்யப்போவது இல்லை என சீன சுகாதாரத்துறை அறிவித்தது. பெரிய அளவில் கொரோனா சோதனைகளை நடத்த வேண்டி இருப்பதாலும், பாதிப்பு எண்ணிக்கையை பதிவு … Read more