ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 60 வயது பெண் உயிரிழப்பு..!

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிராந்திய தலைநகர்  கார்கிவின்  தென் கிழக்கில் , கட்டடங்கள் உள்ளிட்டவை  இடிந்த நிலையில் தீப்பற்றி எரிவது தொடர்பான வீடியோ காட்சிகளை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் துணை தலைவர் கைரிலோ திமோஷென்கோ Telegram-ல்  பாதிவிட்டுள்ளார்.  Source link

திருமணம் கடந்த உறவுக்கு தடை! இந்தோனேஷியா செல்லும் காதலர்களுக்கு சிக்கல்?

இந்தோனேசியாவின் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட குற்றவியல் சட்டம் பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தோனேஷியா திருமணத்திற்கு வெளியே உடலுறவைத் தடைசெய்துள்ள நிலையில், திருமணம் ஆகாத காதலர்கள், இந்தோனேஷியா செல்வதில் சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தோனேசியாவின் பாராளுமன்றம் டிசம்பர் 6, 2022 அன்று காலனித்துவ கால குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றியது, அதில் நாட்டிற்கு வருகை தருபவர்கள் உட்பட அனைவருக்கும் திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வதற்கான தடையும் அடங்கும். … Read more

பிரேசில் நாடாளுமன்ற வன்முறை: உலக தலைவர்கள் கடும் கண்டனம்!

பிரேசில் நாடாளுமன்ற சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரேசில் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோ தோல்வி அடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதை அடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாத … Read more

ஏவுகணை தாக்குதலில் 600 ராணுவ வீரர்களை கொன்றோம்: ரஷ்யா அறிவிப்பு; உக்ரைன் மறுப்பு

கீவ்: தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் 600 ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் தங்கள் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது ஆயுதமும் அழிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உக்ரைனால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரஷ்யாவின் இந்த அறிவிப்பை உக்ரைன் மறுத்துள்ளது. இது … Read more

பசிபிக் தீவு நாடான வானூட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பசிபிக் தீவு நாடான வானூட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.  போர்ட்-ஓர்லி கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியிருந்தது. பூமிக்கடியே  27 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதமோ அல்லது உயிர் பலியோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. Source … Read more

Corona Alert: ஜப்பானைத் தொடர்ந்து கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வட கொரியா

Corona Virus Updates: அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வட கொரியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து நோய்த்தொற்றுகள் பரவினால், ஏற்கனவே இருக்கும் பொருளாதார சிக்கல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் வடகொரிய அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   குளிர்காலம் தொடங்கிய நிலையில், தென் கொரியா, சீனா மற்றும் ஜப்பானில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய வடகொரிய அரசின் தேசிய தொலைக்காட்சி, … Read more

இதய நோயால் மயக்கம் அடைந்த தாய்லாந்து இளவரசிக்கு 3 வாரமாக சுயநினைவு திரும்பவில்லை.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

இதய நோய் காரணமாக மூன்று வாரங்களுக்கு முன்பு மயக்கம் அடைந்து விழுந்த தாய்லாந்து இளவரசி பாஜ்ராகத்தி யாபாவுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. 44 வயதான  இளவரசி, தாய்லாந்து மன்னருக்கு பிறகு, அவரது இடத்தில் அமர போகும் வாரிசாக கருதப்படுகிறார். கடந்த 15ம் தேதி தனது வளர்ப்பு நாய்களை போட்டிக்கு தயார்படுத்தி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு இன்னும் சுயநினைவுக்கு  திரும்பவில்லை என்று அவருக்கு … Read more

பிரேசில் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் சூறை: ஐ.நா. சபை, அமெரிக்கா கடும் கண்டம்

ரியோ டி ஜெனரீயோ: பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் … Read more

புதிய அரசுக்கு எதிராக இஸ்ரேலில் போராட்டம் | Protests in Israel against the new government

டெல் அவிவ் : இஸ்ரேலில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையில் அறிவித்துள்ள கொள்கையை வாபஸ் பெற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில் புதிய அரசுக்கு எதிராக இங்கு போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தையும், நீதித்துறையையும் பலவீனப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கையை கண்டித்து, இந்த போராட்டம் … Read more