ஜப்பான்: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 5 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு

டோக்கியோ, ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதிலும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். ஆனாலும் சில … Read more

போர் மூளும் அபாயம்- உக்ரைனில் இருந்து ரஷ்யர்கள் வெளியேற்றம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற கிரெம்லின் வட்டாரம் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் வசித்துவரும் தங்கள் நாட்டுக் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்படும் அபாயம் உள்ளதால் ரஷ்யாவும் உக்ரைனில் உள்ள தங்களது நாட்டு பிரதிநிதிகளை மீண்டும் மாஸ்கோவுக்கு திரும்ப அழைத்துக் … Read more

இந்தியா உள்பட 8 நாடுகளின் பயணிகள் விமானத்திற்கு ஹாங்காங் அரசு தடை

ஹாங்காங், ஹாங்காங் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் ஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி  இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் … Read more

உக்ரைன் விவகாரம்: அமெரிக்கா – ரஷ்யா அதிபர்கள் பேச்சு வார்த்தை

வாஷிங்டன்: ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை … Read more

உக்ரைனில் இருந்து வெளியேறும் அமெரிக்க துாதரக அதிகாரிகள்| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக அமெரிக்க துாதரக அதிகாரிகள் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் எல்லையில், 1.30 லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. அத்துடன் அண்டை நாடான பெலாரசில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், உக்ரைனின் இருபுறம் உள்ள கடல் பகுதியில் ரஷ்யா தன் போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. … Read more

பல கோடி ஆண்டுகள் பழமையான கருப்பு வைரம் ரூ.32 கோடிக்கு ஏலம்…!

லண்டன், 555 காரட்கள் கொண்ட “தி எனிக்மா” என்று அழைக்கப்படும் கருப்பு வைரம் பல கோடி  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் அல்லது சிறுகோள் பூமியைத் தாக்கியபோது  உருவானதாக நம்பப்படுகிறது. உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட இந்த வைரம் லண்டனில் கடந்த புதன்கிழமை ரூ.32 கோடிக்கு ஏலம் விடப்பட்டது 555.55 காரட், 55 முகங்கள் கொண்ட வைரமானது லண்டனின் புகழ்பெற்ற சோத்பியின் ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆன்லைன் ஏல விற்பனையில் விற்கப்பட்டது. இது குறித்து ஏல நிறுவனம் கூறுகையில், … Read more

கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.! <!– கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் … –>

போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு முகமைகளுடன் இணைந்து கடற்பரப்பில் படகுகளில் நடத்திய சோதனைகளில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணூறு கிலோ போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. இந்தியக் கடற்படை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனைகளில் 800 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டதாகத் தெரிவித்துள்ளது. இவற்றின் சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது.             Source link

இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது – அந்நாட்டு அரசு <!– இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவ… –>

இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா படைகளை குவித்து வருவதால், அங்கு வசிக்கும் இங்கிலாந்து நாட்டவர்கள் விமான சேவைகள் உள்ள போதே வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில், விமானம் மூலம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் உக்ரைனில் மேற்கொள்ள முடியாது என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. அதே போல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு மக்களும் … Read more

சிங்கப்பூர் விமான கண்காட்சி – இந்திய போர் விமானம் பங்கேற்பு

சாங்கி: சர்வதேச விமான தொழில்துறை சார்பில் நடத்தப்படும் சிங்கப்பூரில் விமான கண்காட்சி வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   இரண்டாண்டுக்கு ஒருமுறை சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை  காட்சிப்படுத்த இந்த கண்காட்சி வழிவகுத்துள்ளது. நடப்பாண்டு கண்காட்சியில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்கே-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப் படுத்தவுள்ளது.   தேஜாஸ் விமானம் அதன் சிறந்த கையாளுதல் பண்புகள் மற்றும் திறனை வெளிப்படுத்தும்  … Read more

செல்பி எடுத்து அனுப்பியது நாசாவின் டெலஸ்கோப்| Dinamalar

கேப் கனவரல்:அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ள பிரமாண்ட ‘டெலஸ்கோப்’ எனப்படும் தொலைநோக்கி, நட்சத்திர ஒளியின் முதல் படத்தை அனுப்பி வைத்துள்ளது. மேலும், ‘செல்பி’ எடுத்தும் அனுப்பி வைத்துள்ளது. விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்காக, 1990ல் நாசா அனுப்பிய ‘ஹப்பிள்’ என பெயரிடப்பட்ட டெலஸ்கோப்பில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ‘ஜேம்ஸ் வெப்’ என்ற புதிய டெலஸ்கோப்பை விண்வெளியில் நாசா நிறுவி உள்ளது. கடந்த டிசம்பரில் அனுப்பப்பட்ட இந்த டெலஸ்கோப்பின் பாகங்கள் பொருத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.பூமியில் இருந்து, … Read more