’சோனி மியூசிக்’ – ரஷ்யாவில் சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு..!

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலில் சிக்கி ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உலக நாடுகள்பல ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, பல்வேறு தடைகளையும் விதித்துள்ளன. அதன்படி, பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவையும் தங்களது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி … Read more

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் உலகளவிலான உணவு பொருட்களின் விலை உயரக்கூடும்… எச்சரிக்கும் புதின்

ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகளால் உலகளவிலான உணவு பொருட்களின் விலை உயரக்கூடும் அபாயம் இருப்பதாக அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கிய அரசுத்துறை அதிகாரிகளுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிபர் புதின், ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் சட்டவிரோதமானது என்றும் தடையால் ஏற்படும் பிரச்சினைகளை ரஷ்யா அமைதியாக தீர்க்கும் என்றார். எரிவாயு விநியோகம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து பெரும்பாலான உரம் மற்றும் … Read more

ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்- புதின் எச்சரிக்கை

ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது. இந்தநிலையில் ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ரஷியா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய வினியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம். ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய … Read more

ரஷிய படைகளுக்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு பேஸ்புக் அனுமதி

நியூயார்க், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். … Read more

Hate against Russians: தடம் புரளும் பேஸ்புக்.. புடினுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட ஆதரவு!

ரஷ்யப் படையினருக்கு எதிராகவும், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் போட சில நாடுகளில் மட்டும் அனுமதிக்கப் போவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தி தெரிவிக்கிறது. யாருக்கு எதிராகவும், எந்த வகையிலும் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றைத் தூண்டும் வகையிலான பதிவுகளை அனுமதிப்பதில்லை என்ற தனது நிலையிலிருந்து பேஸ்புக் நிறுவனம் தடம் புரள்வதாக இது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் துவேஷப் பேச்சுக் கொள்கையின் முக்கிய அம்சமே, தனி நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட … Read more

ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

ரஷ்யாவில் தங்கள் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டதாக சோனி மியூசிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாகவும், தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண முயற்சிகளை வழங்கி ஆதரவைத் தொடருவோம் என்று தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. Source link

குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது உக்ரைன்தான் தாக்குதல் நடத்தியது- ரஷியா குற்றச்சாட்டு

மாஸ்கோ: உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆஸ்பத்திரி முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இது இனப்படுகொலை என்றும் உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது. அதே போல் சர்வதேச அளவில் இந்த தாக்குதல் எதிரொலித்தது. குழந்தைகள் ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு ஐ.நா. சபை மற்றும் … Read more

உக்ரைனில் இதுவரை 280 கல்வி நிலையங்களை ரஷ்யா முற்றிலுமாக அழித்துள்ளதாக தகவல்

உக்ரைனில் இதுவரை 280கல்வி நிலையங்களை ரஷ்யா ஏவுகணை மற்றும் வெடிகுண்டுகளை வீசி அழித்துள்ளதாக அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் Serhiy Shkarlet தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் ஏராளமான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இடிந்து போய் சேதமாகி விட்டதாகவும் கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா 2வது வாரமாக போர் நடத்தி வருகிறது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. Source link

உக்ரைன் கோரிக்கைகளை ரஷியா ஏற்க மறுப்பு- பேச்சு தோல்வி அடைந்ததால் கீவ் நகரில் தாக்குதல் தீவிரம்

கீவ்: உக்ரைன் மீதான ரஷிய ராணுவத்தின் தாக்குதல் இன்று 16-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அதேபோல் அந்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் உள்ளது. ஆனால் தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை ரஷிய படையால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. … Read more

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் சேதம்

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளை முன்னேற விடாமல் தடுக்க உக்ரைன் ராணுவம் அழித்த சாலை,  மேம்பாலம் உள்ளிட்ட நகர உள்கட்டமைப்புகள் மற்றும் ரஷ்யப் படைகளின் குண்டு மழையில் பல்வேறு பகுதிகளை உருக்குலைந்தன. ஏறத்தாழ 50 சதவீத பொருளாதாரம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும், போரை உடனடியாக நிறுத்தாவிட்டல் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீரழியும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்தார். Source … Read more