இந்தியா – சீனா எல்லையில் பதற்றம் மோசமாக உள்ளது

வாஷிங்டன்:’கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்திய – பசிபிக் பிராந்திய நிலவரம் குறித்து ஆராய, அமெரிக்க பார்லி.,யில் ஆயுத சேவைகள் குழு கூட்டம் நடந்தது. இதில், அமெரிக்காவின் இந்திய – பசிபிக் பிராந்திய கமாண்டர் அட்மிரல் ஜான் அக்யுலினோ பேசியதாவது:இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத … Read more

குழந்தையை கொன்ற தந்தை கைது| Dinamalar

லாகூர்:பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். அண்டை நாடான பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணம் மியான்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஜாய்ப் கான், 22. இவர் தனக்கு முதலில் ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். கடந்த வாரம் இவர் மனைவிக்கு தலைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்காமல் கடும் ஆத்திரத்தில் இருந்த கான், கடந்த 7ம் தேதி வீட்டுக்கு வந்தார். பிறந்து … Read more

கார்கீவ், டெர்ஹாச்சி நகரங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

ரஷ்யா கைப்பற்ற முயன்ற கார்கீவ், டெர்ஹாச்சி உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் நகரங்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியபோது, உக்ரைன் ராணுவம் அந்த தாக்குதலை முறியடித்து மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ந் தேதி கார்கீவ் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 7வயது குழந்தை உட்பட 2பேர் உயிரிழந்தனர். உக்ரைனில் இருக்கும் நகரங்களில் கார்கீவ் நகரத்தில் தான் அதிக குண்டுவெடிப்பு … Read more

கர்ப்பிணி பெண் உட்பட 17 பேர் படுகாயம்| Dinamalar

மரியுபோல்:உக்ரைனில் மருத்துவமனைகளை குறிவைத்து, ரஷ்ய ராணுவத்தினர் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதல்களில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர். ரஷ்ய ராணுவம், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நுழைந்து, இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக, தலைநகர் கீவ் உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி, கட்டடங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய படையின் தாக்குதலில் இருந்து … Read more

உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல்.. ஐ.நா சபை கண்டனம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மரியுபோலில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல மருத்துவமனையின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி நிகழ்த்திய தாக்குதலில், 17 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமானது எனவும் போருக்கு சம்பந்தமே … Read more

உக்ரைன் போர் – ரஷ்யா, பெலாரஸில் அமேசான் சேவைகள் அனைத்தும் ரத்து

உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மற்றும் பெலாரஸில் அமேசான் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் டெலிவரி சேவைகள், அமேசான் பிரைம் ஓடிடி தள சேவைகள் நிறுத்தப்படுவதாகவும், AWS கிளவுட் கம்ப்பியூட்டிங் சேவைக்கு இரு நாடுகளில் இருந்தும் புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு, நியூ வேர்ல்ட் (New World) எனும் அமேசானின் வீடியோ கேம் விற்பனையையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. … Read more

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் – ரஷியாவிற்கு ஐ.நா கண்டனம்

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.   இதற்கிடையே, உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 17 பேர் காயமடைந்தனர். மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு ஆகியவை சேதமடைந்தன. ஒரு குழந்தை உள்பட … Read more

பல்வேறு தடைகள் விதித்தாலும் ஐரோப்பாவிற்கு தடையின்றி எரிவாயு ஏற்றுமதி செய்யும் ரஷ்யா..

ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகள் விதித்தாலும், ரஷ்ய கொள்கலன் கப்பல்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தங்குதடையின்றி எரிவாயு கொண்டு சென்ற வண்ணம் உள்ளன். ஐரோப்பிய நாடுகளின் 40 சதவீத எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யா மீது தொடுக்கப்பட்ட தடைகளுக்கு பதிலடி தரும் விதமாக, அதிபர் புடின் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும், உக்ரைன் போரால் ரஷ்ய பொருளாதாரம் கடுமையாக சரிந்ததால், வருவாயை பெருக்க ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய்கள் … Read more

உக்ரைன் மீது போர்.. வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்.. ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வேலை இழக்கும் அபாயம்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்ய தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியதால் ஆயிரக்கணக்கான ரஷ்யர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேம் பிரியர்களால் விரும்பி விளையாடப்படும் பிளே ஸ்டேஷன் – 5 கன்சோல்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்போவதில்லை என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பீர் நிறுவனமான ஹெனிகென் (Heineken) ரஷ்யாவில் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. அதே சமயம், கார்ல்ஸ்பெர்க் நிறுவனம், தனக்கு சொந்தமான ரஷ்ய பீர் நிறுவனத்தில் பணியாற்றும் 8,400 ஊழியர்களின் நிலை … Read more

செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு செல்லும் மின் கட்டமைப்புகள் சேதம்.. ரஷ்யா உடனடியாக தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மின்கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டியுள்ளதால் ரஷ்யா உடனடியாக தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய படைகளின் தாக்குதலால் செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகளுக்கு மின்சாரம் செல்லாததால் கதிர்வீச்சு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more