உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியால் சோர்வடைந்த வீரர்களுக்கு ஊக்கமளித்த பிரான்ஸ் அதிபர் – வைரலாகும் வீடியோ..!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி வீரர்களை ஊக்கமூட்டும் வகையில், அந்நாட்டு அதிபர் மேக்ரான் பேசிய வீடியோ, இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி கோப்பை வெல்லும் வாய்ப்பை பிரான்ஸ் அணி தவறவிட்டது. இந்நிலையில், போட்டியை மைதானத்தில் கண்டுரசித்த அதிபர் மேக்ரான், ஆட்டம் முடிந்தபின் சோர்வடைந்திருந்த அணி வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், வீரர்களின் அறைக்கு சென்ற அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக, அவர்களிடம் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.