ஆஸ்திரேலியாவில் மறைந்த சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னின் சிலைக்கு மக்கள் மலர்கள் மற்றும் பீர் பட்டில்களை வைத்து அஞ்சலி.! <!– ஆஸ்திரேலியாவில் மறைந்த சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னின்… –>

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், மறைந்த சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னின் சிலைக்கு மக்கள் மலர்கள் மற்றும் பீர் பட்டில்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்ன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடன் சொகுசு பங்களாவில் தங்கியிருந்த 3 நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அறையில் மயங்கி கிடந்த ஷேன் வார்னுக்குத் தானும், மருத்துவமனை ஊழியர்களும் சி.பி.ஆர் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் ஷேன் வார்னின் உடல் … Read more

போலந்தில் அமெரிக்க துருப்புகள் 2 மடங்காக அதிகரிப்பு- வெளியுறவுத்துறை மந்திரி தகவல்

வார்சா: உக்ரைன்  மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடான போலந்துக்கு அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். நேட்டோ உறுப்பு நாடான போலந்து, அவர்களை வரவேற்று தேவையான உதவிகளை செய்து வருகிறது. அதேசமயம் பாதுகாப்பு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.  இந்நிலையில், போலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், போலந்து பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேசினார். உக்ரைன் எல்லை அருகில் உள்ள நகரில் இந்த சந்திப்பு … Read more

'சர்வாதிகாரி புதின்… போருக்காக நீங்கள் கொடுக்கப் போகும் விலை மிகப் பெரியது!' – பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: “சர்வாதிகாரி புதினே, போருக்காக நீங்கள் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் முழுமையாக 7 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டுக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் பைடன், “ரஷ்ய சர்வாதிகாரி ஒருவர் வெளிநாட்டின் மீது படையெடுத்துள்ளார். அந்தப் போரால் உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்குப் பதிலடியாக அவர் உலகம் முழுவதுமிருந்து எதிர்ப்புகளை சம்பாதித்து … Read more

எல்லோரும் பயந்தது நடக்கப் போகுது.. முழு வீச்சில் உக்ரைனைத் தாக்கத் தயாராகும் ரஷ்யா

உக்ரைன் மீது முழு அளவிலான போர் தொடுக்க ரஷ்யா ஆயத்தமாகி வருகிறது. ஆரம்பத்தில் வேகம் காட்டிய ரஷ்யா பின்னர் மெல்லப் பதுங்கியது. வேகமாக பாய்வதற்காகத்தான் இப்படிப் பதுங்குகிறது என்று கருதப்பட்ட நிலையில் அது தற்போது உண்மையாகப் போகிறது. உக்ரைனுக்குள் கூடுதலாக ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாம். சரமாரியாக குண்டுகள் வீசி உக்ரைன் நகரங்களை வளைத்துப் பிடிக்கும் திட்டத்திலும் ரஷ்யா உள்ளதாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கூறியுள்ளன. கூடுதல் வீரர்களை ரஷ்யா ஆயத்தப்படுத்தி வருவது உறுதியாகியுள்ளதாக அவர்கள் … Read more

பல்வேறு தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உக்ரைன் வீரர்கள், பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை.! <!– பல்வேறு தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில… –>

பல்வேறு தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உக்ரைன் வீரர்கள், பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்தனர். சீனாவில் தொடங்கிய குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளின் முதல் நாளான இன்று, உக்ரைன் நாட்டு மாற்றுத்திறனாளி வீரர்கள் 3 தங்கப்பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். ரஷ்யா போர் தொடுத்ததால், உக்ரைன் சார்பில் பாராலிம்பிக்கில் பங்கேற்க இருந்த 20 வீரர்களும் சீனா வந்தடைய முடியாத சூழல் ஏற்பட்டது. இருந்த போதும் முதல் நாளே 7 … Read more

நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உக்ரைன் அதிபர்

கீவ்: ரஷிய படைகள் உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டைவிட்டு போலந்துக்கு தப்பி ஓடியதாக வதந்தி பரவியது. இதை மறுத்துள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி. இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் செல்வி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசிய ஜெலன்ஸ்கி, தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் கூறி உள்ளார். ‘நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் … Read more

சீனாவின் ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 230 பில்லியன் டாலர்; இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

பெய்ஜிங்: சீனா அரசு நடப்பு ஆண்டிற்கான ராணுவ செலவினங்களுக்காக கடந்த ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகமாக, 230 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது. அது குறித்து சீன அரசின் நாளிதழனான ’சைனா டெய்லி’யில் வெளியான தகவலில், ’சீன அரசு தனது நாட்டின் ராணுவ பட்ஜெட்டை இன்று முன்மொழிந்தது. சீன நாடாளுமன்றத்தில், தேசிய மக்கள் காங்கிரஸில் அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங் ராணுவ பட்ஜெட்டினைத் தாக்கல் செய்தார். ராணுவ செலவினங்களுக்காக சீன அரசு இந்த ஆண்டு 1.45 … Read more

விமானப்படை இல்லாமலேயே.. ரஷ்யா வேகமாக முன்னேறுகிறது.. பரபர தகவல்!

உக்ரைன் போரில், விமானப்படையைப் பயன்படுத்தாமலேயே ரஷ்யா திட்டமிட்டு வேகமாக முன்னேறி வருவதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலை நாடுகள் ரஷ்யாவைப் பற்றி தப்புக் கணக்கு போடக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கியபோது விமானப்படையை வெகுவாக பயன்படுத்தியது ரஷ்யா. இதனால் உக்ரைனில் உள்ள பல விமான தளங்கள் தகர்க்கப்பட்டன. ஆனால் திடீரென தனது விமானப்படையை பயன்படுத்தாமல் நிறுத்தி விட்டது ரஷ்யா. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்தன. விமானப்படை இல்லாமல் போரில் ஈடுபட்டு … Read more

ரஷ்ய நாட்டு விமானங்கள் பறக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திரும்ப முடியாமல் தவிக்கும் ரஷ்யர்கள் <!– ரஷ்ய நாட்டு விமானங்கள் பறக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்… –>

ரஷ்ய விமானங்கள் பறக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற ரஷ்யர்களால் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து, 27 நாடுகளின் வான்வழிப் பாதையை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பல்கேரியாவின் பிரின் மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் பனிச்சறுக்கு செய்து பொழுது போக்கும் ரஷ்யர்களால் மீண்டும் ரஷ்யாவிற்கு செல்ல முடியாமல் உள்ளனர். இவர்களை போலவே கரீபியத் தீவுகளில் 10,000 ரஷ்யர்களும், கியூபாவில் 8,000 … Read more

உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய ரஷிய இளம் வீரர்கள் பெற்றோரை பார்க்க ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சல்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறார்கள். ரஷியா பிடித்துள்ள நகரங்களை மீட்க உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து போராடி வருகிறது. போர் முனையில் நிற்கும் ரஷிய படைகளை எதிர்கொண்டு வரும் உக்ரைன் ராணுவத்தினரிடம் ரஷிய வீரர்கள் பலர் ஆயுதங்களுடன் சிக்கி வருகிறார்கள். அவர்களை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் பிடித்து தங்கள் முகாம்களுக்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர். உக்ரைனிடம் சிக்கிய ரஷிய வீரர்கள் சிலர் ராணுவ அதிகாரிகளிடம் உருக்கமாக … Read more