உலகின் அணு ஆயுத வல்லரசாவதே வடகொரியாவின் இலக்கு: கிம் ஜாங் உன்

பியாங்யோங்: அணுசக்தியை உருவாக்குவது என்பது, வடகொரியாவின் கண்ணியம் மற்றும் இறையாண்மையை நம்பத்தகுந்த வகையில் பாதுகாப்பதற்காகவே என்று, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உங் தெரிவித்துள்ளார். உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே நாட்டின் இறுதி இலக்கு என்று அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், வட கொரியாவின் மிகப் பெரிய ஏவுகணையை ஏவும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியபோது கிம் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் … Read more

தொடர்ந்து 3-வது நாளாக சீனாவில் 30,000 பேருக்கு கரோனா தொற்று

பெய்ஜிங்: சீனாவில் நேற்று தொடர்ந்து 3-வதுநாளாக 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சீனாவில் மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 35,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3,405 பேருக்கு அறிகுறியுடன் கூடிய பாதிப்பும், 31,504 பேருக்கு அறிகுறியற்ற பாதிப்பும் இருந்தது. இது சீனாவின் தினசரி கரோனா பாதிப்பில் மிக அதிகமான அளவு. நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த வியாழக்கிழமை 32,695 பேருக்கு … Read more

3 இந்திய வம்சாவளியினரின் துாக்கு தண்டனை உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்,-போதைப் பொருள் கடத்தி வந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இந்திய வம்சாவளியினர் உட்பட நான்கு பேரின் மேல்முறையீட்டு மனுவை, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான லிங்கேஸ்வரன் ராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி கட்டையா, சாமிநாதன் செல்வராஜு மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜூமத் முஹமது செய்யது ஆகிய நான்கு பேரும் போதைப்பொருள் கடத்தி வந்ததாக சிங்கப்பூர் போலீசால் கைது … Read more

பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு மூன்று பேர் பலி; 11 பேர் படுகாயம்| Dinamalar

பிரேசிலியா,-பிரேசிலில் உள்ள இரண்டு பள்ளிகளில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்; 11 பேர் படுகாயமடைந்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது குறித்து, இந்த மாகாணத்தின் பாதுகாப்பு செயலர் கூறியதாவது: இந்த மாகாணத்தின் அராக்ரஸ் என்ற நகரத்தில் இரண்டு தனியார் துவக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் இரு பள்ளிகளையும் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். … Read more

78 வயதில் வந்த ஆசை…! பாலியல் குற்றச்சாட்டில் 'ஸ்குவிட் கேம்' நடிகர்!

சியோல் நெட்பிளிக்ஸ் ஒடிடிட் தளத்தில் பிரபலமான தொடரான ‘ஸ்குவிட் கேம்’-இல் நடித்தவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஓ யோங்-சு. இவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில், தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 78 வயதான ஓ யோங்-சு ஸ்குவிட் கேம் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் … Read more

மெக்சிகோவில் 2 அங்குல வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை வழியே பிரசவம் நடந்து உள்ளது. இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டு உள்ளது. உருளை வடிவில் காணப்படும் அந்த வாலானது, தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்து உள்ளது. இதன்பின்னர் அதனை மருத்துவர்கள் அறுவை … Read more

ஆன்லைன் காதலரை சந்திக்க ஆவலுடன் 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி…

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நாடு. இதற்காக மேயர் உள்ளிட்ட உயர்ந்த அரசியல் பதவியில் உள்ளவர்கள் கூட கொல்லப்படும் சூழல் காணப்படுகிறது. கடத்தல் கும்பலை ஒழிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்த நிலையில், மெக்சிகோ நாட்டில் இருந்து பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் (வயது 51) என்ற பெண், ஆன்லைன் வழியே ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற ஆடவரை தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொடர்பு நாளடைவில் காதலானது. … Read more

பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்: 3 பேர் பலி; அதிபர் இரங்கல்

பிரேசிலியா, பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அராகுரூஸ் என்ற சிறிய நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் இரண்டு பள்ளிகளில் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மாகாண கவர்னர் ரெனேட்டோ காசாகிராண்ட் உறுதிப்படுத்தி உள்ளார். அராகுரூசில் உள்ள 2 பள்ளி கூடங்களில் கோழைத்தன … Read more

Anoushka Sunak: குச்சிப்புடி நடனமாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மகள்

பிரிட்டன் நாட்டில் நடந்த சர்வதேச குச்சிப்புடி நடன திருவிழாவில், பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷ்கா சுனக், 9, குச்சிப்புடி நடனம் ஆடினார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (42) சில மாதங்களுக்கு முன் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையுடன், கடந்த 200 ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்றவர்களில் மிக இளையவர் என்பதும் உள்ளது. வழக்கமாக பிரிட்டன் … Read more

ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது… வீடியோ வெளியிட்ட நாசா

வாஷிங்டன், நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெள்ளிக்கிழமை நிலைநிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புளோரிடாவிலிருந்து சந்திரனை நோக்கி விண்கலம் புறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விஞ்ஞானிகள் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கினர். பின்னர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக நாசா தனது அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் தெரிவித்தது. இந்த விண்கலம் வரும் ஆண்டுகளில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்ல உள்ளது. 1972 இல் கடந்த அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு அதன் மேற்பரப்பில் காலடி … Read more