ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி – தாய்லாந்து உறவு – 30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் துளிர்த்தது

ரியாத்: ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி அரேபியா, தாய்லாந்து உறவு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துளிர்த்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டில் சவுதி அரேபியாவின் இளைஞர் நலத்துறை தலைவராக இளவரசர் பைசல் பின் பாத் இருந்தார். அவர், அப்போதைய சவுதி மன்னர் பாத்தின் மூத்த மகன் ஆவார். அவரது அரண்மனையில் தாய்லாந்தை சேர்ந்த கிரியாங்ராய் டெங்காமாங் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நூற்றுக்கணக்கான வீரர்களின் பாதுகாப்பில் இருக்கும் அரண்மனை என்பதால் இளவரசர் பைசல் தனது … Read more

பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி; 11 பேருக்கு காயம் – பதைபதைக்க வைக்கும் வீடியோ

Brazil School Shooting : பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் அருகருகே உள்ள இரண்டு பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று (நவ. 25) துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கையில், செமி ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கியை வைத்திருந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  தொடர்ந்து, அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ராணுவ உடையில், முகத்தை மறைத்து இருந்துள்ளார். மேலும், அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில், 2 ஆசிரியர்கள், 1 மாணவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

சீனாவில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கரோனா – காரணம் என்ன?

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் தினசரி … Read more

ஆஸி. பெண் கொலையில் தேடப்பட்டவர் டெல்லியில் கைது

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான தோயா கார்டிங்லி என்ற பெண்ணை, இந்தியாவைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங் (38) கொலை செய்தார். ரஜ்விந்தர் சிங், குயின்ஸ்லாந்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கொலைக்குப் பிறகு ரஜ்விந்தர் சிங், தனது மனைவி, குழந்தைகளை … Read more

பிரபல ஓவியரை கொலை செய்த 49 பேருக்கு துாக்கு தண்டனை| Dinamalar

அல்ஜியர்ஸ், அல்ஜீரியாவில் ஓவியரை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்த 49 பேருக்கு தூக்கு தண்டனையும், 38 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவின் பிரபல ஓவியரான பென் இஸ்மாயில் சமூக சேவைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். இந்நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள கபைலி என்ற இடத்தில் கடந்த ஆண்டு காட்டுத்தீ பரவியது. அதை அறிந்து அங்கு சென்ற பென் இஸ்மாயில் அதில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் … Read more

நேபாளம் தேர்தல் நிலவரம் : மீண்டும் ஷேர் பகதூர் துபா ஆட்சி

காத்மாண்டு : நேபாளத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 165 எம்.பி.க்களை தவிர விகிதாச்சார முறைப்படி 110 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடந்தது. அதே நேரம் 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 உறுப்பினர்களை தவிர … Read more

சீனாவில் குடியிருப்பில் தீ விபத்து 10 பேர் பலி; 9 பேர் படுகாயம்| Dinamalar

பீஜிங், சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் பலியாகினர்; ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். நம் அண்டை நாடான சீனாவில், ஜின்ஜியாங் மாகாணத்தின் தியான்ஷன் மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று முன்தினம் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்; ஒன்பது பேர் படுகாயங்களுடன் … Read more

சந்தேகத்தால் வந்த வினை ஒரு கொலை….! 49 பேர்களுக்கு மரண தண்டனை…!

அல்ஜீரியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக கூறி ஒருவரை பொதுமக்கள் கூட்டமாக அடித்து கொன்றனர். இந்த வழக்கில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவில் 2021 ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ வேகமாக பரவியது.அந்த காட்டுத்தீயில் சுமார் 90 பேர்கள் மரணமடைந்திருந்தனர். இதற்கு ஜமீல் பின் இஸ்மாயில்(38) தான் காரணம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதை அறிந்த இஸ்மாயில் போலீசாரின் உதவியை நாடியுள்ளார். அங்கு வந்த போலீசார் ஜமீல் பின் இஸ்மாயிலை வாகனத்தில் ஏற்றினர். கூட்டமாக … Read more

சீனாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: ஒரே நாளில் 32,943 பேருக்கு பாதிப்பு

பீஜிங், சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது. நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 … Read more

சவுதி அரேபியாவில் பெய்த கனமழைக்கு இருவர் உயிரிழப்பு

ரியாத், மேற்கு சவூதி அரேபியாவின் கடலோர நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், மழையால் விமானங்கள் தாமதமானது. பள்ளிகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்கள் மெக்காவை அடைவதற்குப் பயன்படுத்தும் சாலை, மழை தொடங்கியவுடன் மூடப்பட்டது. ஜெட்டாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால மழை மற்றும் … Read more