அமெரிக்கா: கொரோனா பரவல் அச்சமுள்ள சூழலில் காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக பாதித்திருந்த நிலையில், சமீப காலங்களாக அதில் இருந்து ஓரளவு விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பெருந்தொற்றுக்கு பின்னான முதல் குளிர்கால சூழலை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எனினும், கொரோனா பாதிப்புகள் சமூக மட்டங்களில் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த சமூக பரவலான பகுதிகளில் அந்நாட்டவர் 14 சதவீதத்தினர் வசிக்கின்றனர். இதனை முன்னிட்டு அதிபர் பைடன், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. … Read more

குளிர்காலத்தின் போது கொரோனா தொற்றின் மூன்று அலைகள் தாக்கக்கூடும் – சீன தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை!

சீனாவில், குளிர்காலத்தின் போது கொரோனா தொற்றின் மூன்று அலைகள் தாக்கக்கூடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மருத்துவ பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைகளின் பணி மந்தமாகியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத சூழல் உள்ளது. சீன தொற்று நோயியல் நிபுணர்களின் கணிப்புப்படி, முதல் அலை தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி மாத மத்தியில் முதல் அலை முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளனர். ஜனவரி 21-ஆம் தேதி, சந்திர புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் நாடு முழுவதும் பயணம் … Read more

போதைப் பொருட்களின் ரகசிய குறியீடாக மாறும் எமோஜிக்கள்; இங்கிலாந்து போலீஸ் பகீர்.!

கடந்த சில ஆண்டுகளாக, டிஜிட்டல் உலகத் தகவல்தொடர்பில், எமோஜிக்களே நவீனகால ஹைரோகிளிஃப்களாக மாறியுள்ளன. நவீன எமோஜிகள் பயன்பாடு, 1999 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. எமோஜிக்களுக்கு மொழி கிடையாது என்பதுதான் அதன் முக்கிய சிறப்பு. இந்த எமோஜி வெளிப்படுத்தும் உணர்வை, உலகின் எந்த நாட்டுக்காரரும், எந்த மொழி பேசுபவரும் புரிந்துக் கொள்ள முடியும். சொற்களே இல்லாமல், வெறும் எமோஜிக்கள் மட்டுமே வைத்து எழுதப்படும் கவிதைகள் இன்று ஏராளம். ஆனால் போதைப் பொருட்களின் ரகசிய குறியீடாக எமோஜிக்கள் மாறி வருவதாக … Read more

ஹிட்லர் நடத்திய படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்த மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை!

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூடங்களாக செயல்பட்டன. நாஜி  வதை முகாம் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நாஜி சித்ரவதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இன் அழிப்பு படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாமில் பணிபுரிந்த 97 வயதான … Read more

3 மாதங்களுக்கு 3 அலைகளில் கொரோனா தாக்கும்; சீனாவில் ரெட் அலர்ட்.!

சீனாவில் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சீன அரசு இதுவரை மவுனம் காத்து வருகிறது. எவ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் பாதிக்கப்படுவோர் … Read more

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை: தாலிபான்களுக்கு அமெரிக்கா கண்டனம்!

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர். ஆப்கானிஸ்தானில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு … Read more

கொரோனா ஒரு பக்கம்! பறவைக் காய்ச்சல் இன்னொரு பக்கம்? உலகத்திற்கே சுகாதார அச்சுறுத்தல்

உலக அளவில் கொரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், கொரோனாவுக்கு போட்டியாக பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பாவில் திடீரென பரவத்தொடங்கியுள்ள  உயிர்க்கொல்லி நோய் பறவைக் காய்ச்சல். ஐரோப்பாவில் இந்த ஆண்டு மிக மோசமான பறவைக் காய்ச்சல் (Bird flu) வெடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 600க்கும் மேற்பட்ட காட்டுப் பறவைகள், குறிப்பாக வாத்துகள் மற்றும் கொக்குகள் என இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது, இது பண்ணைகளுக்கு இடையில் வைரஸ் பரவுவதற்கு … Read more

கருப்பின பெண்ணை அவரது வீட்டில் சுட்டுக் கொலை செய்த வழக்கு.. முன்னாள் காவல் அதிகாரிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை!

கருப்பின பெண்ணை சுட்டுக் கொன்ற வழக்கில், டெக்சாஸ் முன்னாள் காவல் அதிகாரிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜெபர்சன் என்ற கருப்பின பெண் தனது வீட்டில் உறவுக்கார சிறுவனுடன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததால் திருடன் புகுந்துவிட்டதாக எண்ணி பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலின் படி, அங்கு சென்ற காவலர் ஆரோன் டீன், வீட்டின் பின்பக்கமாக நின்றிருந்துள்ளார். அப்போது, வெளியே ஏதோ … Read more

தாய்நாட்டில் திரண்ட ரசிகர்கள்: அர்ஜெண்டினா அணியினரின் வெற்றிப் பேரணியில் தவிர்க்கப்பட்ட விபத்து

பியூனஸ் அயர்சில்: 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், மிகுதியான கூட்டத்தால் வீரர்கள் சென்ற பேருந்து விபத்துகளில் இருந்து நல்வாய்ப்பாக தப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. … Read more

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் எலுமிச்சை பழத்திற்கான தேவை அதிகரிப்பு..!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் இயற்கை மருந்துகளை நாடுவதால் எலுமிச்சை பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி சீனாவில் எலுமிச்சை வணிகம் திடீரென அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எலுமிச்சை பழத்திற்கான விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், எடை குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவரை பல நன்மைகள் இருப்பதால் மக்கள் அதிகளவில் எலுமிச்சை பழத்தை வாங்கி வருகின்றனர். ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட மற்ற பழங்களின் … Read more