எனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இம்ரான் கான் கூறியதாவது:- எனது மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன், ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு … Read more

பெருவில் போலீசாருடனான மோதலில் 3 பேர் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடான பெருவில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பெரு அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ, கடந்த 7ம் தேதி, பதவி நீக்கம் செய்யப்பட்டு, கிளர்ச்சி மற்றும் சதி குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பெருவில் மத்திய பகுதியிலுள்ள பிச்சானாகி பாலத்தில் போராட்டக்காரர்கள் வைத்த தடுப்புகளை, போலீஸார் அகற்றியதோடு கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 9 போலீஸார் உட்பட … Read more

சீனா கொரோனா பாதிப்பு: லட்சக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு; உலக அளவில் மீண்டும் ஒரு எச்சரிக்கை

பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று தொடர்புடைய உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியானது. பிஎப் 7 எனப்படும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது. … Read more

அர்ஜெண்டினா அணியிடம் போராடி தோல்வியடைந்த பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அந்நாட்டு ரசிகர்கள்..!

அர்ஜெண்டினா அணியிடம் போராடி தோல்வியடைந்த பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமான நிலையம் வெளியே திரண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவை நோக்கி ஆரவாரம் செய்தனர். வழிநெடுக பட்டாசுகளை வெடித்தும், தேசிய கொடிகளை அசைத்தும் வீரர்களை வரவேற்றனர். Source link

ரஷ்யா மீண்டும் அதிரடி தாக்குதல்: உக்ரைனில் மின்சாரம் துண்டிப்பு; குடிநீர் வினியோகம் பாதிப்பு!

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யப் படைகள் மீண்டும் நடத்திய அதிரடி தாக்குதல்களால், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதோடு, குடிநீர் வினியோகம் தடைபட்டு உள்ளது. பல ஆண்டுகளாக உக்ரைன் நாட்டை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. உக்ரைன் நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவை ஒத்துப் போவதால், அந்நாடு, தங்களுக்கு தான் சொந்தம் என, ரஷ்யா உரிமை கோரி வருகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட … Read more

ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளை நிர்வகிப்பது மிகவும் சவாலாக உள்ளது – புடின்

உக்ரைன் படைகளின் தொடர் தாக்குதலால், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள 4 உக்ரைனிய மாகாணங்களை நிர்வகிப்பது, மிகவும் சவாலாக உள்ளதாக, அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புடின் இவ்வாறு வெளிப்படையாகத் தெரிவிப்பது, உக்ரைன் படையெடுப்பு அவர் எதிர்பார்த்தவண்ணம் அமையவில்லை என்பதை காட்டுவதாக, அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் உக்ரைன் ஆதரவாளர்களை கண்டறியுமாறும், எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறும், ராணுவத்தினருக்கு புடின் உத்தரவிட்டுள்ளார். தாக்குதலை தீவிரப்படுத்த, பெலாரஸின் உதவியை புடின் நாடக்கூடும் என உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. Source link

'குஜராத் கசாப்பு கடைக்காரர்' – பிரதமர் மோடியை சீண்டிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி!

பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து … Read more

மூன்றாம் சார்லஸ் படத்துடன் கரன்சிகள்: பிரிட்டன் வங்கி வெளியிட்டது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவ படத்துடன் கூடிய புதிய கரன்சி நோட்டுகள் அந்நாட்டு வங்கி வெளியிட்டுள்ளது. 70 ஆண்டுகளாக பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூடிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரிட்டனில் தயாரிக்கப்படும் நாணயங்களில் இனிமூன்றாம் சார்லஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ உருவமும் பொறிக்கப்படும் அறிவிக்கப்பட்டு அதன்படி மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவத்துடன் புதிய நாணயங்களை கடந்த செப்டம்பரில் பிரிட்டனின் … Read more

பருவநிலை மாற்றத்தால் 30 நாடுகளில் காலரா பரவல் – WHO எச்சரிக்கை!

பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலக அளவில் காலரா பரவலானது, இதற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2022 ஆம் ஆண்டில் காலரா வியாதியானது, 30 நாடுகளில் பரவியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்றியல் வியாதிகளுக்கான குழு … Read more

திறந்த பஸ்சில் வீரர்கள் பேரணி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியுனஸ் ஏர்ஸ்: கால்பந்து உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, தாயகம் திரும்பியது. கோப்பையுடன் திறந்த பஸ்சில் ஊர்வலமாக சென்ற வீரர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலக கோப்பை கால்பந்து தொடரின் 22வது சீசன் கத்தாரில் நடந்தது. லுசெய்ல் மைதானத்தில் நடந்த பைனலில் மெஸ்சியின் அர்ஜென்டினா, இளம் வீரர் எம்பாப்வே இடம் பெற்ற பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் … Read more