ப்ளூ டிக் தெரியும்… அதென்ன க்ரே டிக்? கலர் கலராக குழப்பும் ட்விட்டர் வலைதளம்!

சமூக வலைதளங்களில் சர்வதேச அளவிலான பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும் ட்விட்டரில் நடந்த சச்சரவுகளை பற்றி பலரும் அறிந்திருப்பர். அந்நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தி தலைமை நிர்வாகிகளை ஓடவிட்டது முதல் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்தது அடுத்தடுத்து அதிரடியான சம்பவங்கள் அரங்கேறின. இதற்கிடையில் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கிக் கொண்டு நிறுவனங்கள் அல்லது பிரபலங்களின் பெயரில் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ட்விட்டர் நிறுவனம் முடிவு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு வண்ணங்களில் டிக்கை … Read more

ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டன – அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

உக்ரைனில் ஈரானை சேர்ந்த 30 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது இரவு உரையின்போது ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ரக காமிகேஸ் ட்ரோன்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட இந்த ட்ரோன்கள் அதன் இலக்குகளை அடையமுடியவில்லை என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஈரான் சமீபத்தில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பு ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்டது.  Source link

அயர்லாந்து பிரதமராக லியோ வரத்கர் மீண்டும் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து!

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அயர்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர். 38 வயதில் பிரதமர் ஆனது மூலம் அயர்லாந்தின் இளம் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன் கேல் கட்சி பியனா பெயில் … Read more

டெஸ்லா பங்கு வீழ்ச்சிக்கு பெடரல் ரிசர்வ் வங்கியே காரணம் – எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த ஆண்டு டெஸ்லா வாகன நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சிக்கு  பெடரல் ரிசர்வ் வங்கியே காரணம் என்று தொழில் அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா சந்தை மூலதனத்தில் 600 பில்லியன் டாலர்களுக்கு கீழாக  சரிவடைந்ததை தொடர்ந்து, தம் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், பெடரல் ரிசர்வ் வங்கியை தாங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றும் அதன் வட்டி விகிதம் அதிகரிப்புமே காரணம் என்றும்  கூறியுள்ளார். இதனிடையே எலான் மஸ்க் 44 பில்லியன் … Read more

இன்று ஒருநாள் பொது விடுமுறை… அர்ஜென்டினா World Cup வெற்றியை கொண்டாட வேற லெவல் ஏற்பாடு!

38 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை அர்ஜென்டினா வென்றது தான், சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியொரு இறுதிப் போட்டியை வாழ்நாளில் கண்டதில் என்று கால்பந்து ரசிகர்கள் முதல் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் வரை பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு அர்ஜென்டினாவிற்கு இணையாக தரமான சம்பவத்தை செய்தது பிரான்ஸ் அணி. கால்பந்து நாயகன் மெஸ்ஸி லியோனல் மெஸ்ஸி எந்த அளவிற்கு கால்பந்தின் கடவுளாக உயர்த்தி பேசப்படுகிறாரோ? அதேபோல் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே-வையும் பேசியே … Read more

Pakistan India: இந்தியாவுக்கான வெளியுறவுக் கொள்கையை நிர்ணயித்தது நானே! இம்ரான் கான்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (2022 டிசம்பர் 19) பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், “எனது மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன், ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. ஒரு தடையாக … Read more

பெரு நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்து சென்று போலீசார் நடவடிக்கை..!

பெரு நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்து சென்று போலீசார் கைது செய்தனர். லிமாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஒரு குடும்பத்தினர் ஈடுபடுவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டின் கதவை பெரிய சுத்தியல் கொண்டு உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டிற்குள் கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், 4 பேரை கைதுசெய்தனர். கோகோ இலை மற்றும் கோகோயின் உற்பத்தியில் அண்டை நாடான கொலம்பியாவிற்கு அடுத்த இடத்தில் பெரு உள்ளது. … Read more

திருமதி உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண்

லாஸ்வேகாஸ்: திருமணமான பெண்களுக்காக கடந்த 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் 63 நாடுகளை சேர்ந்த திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற சர்கம் கவுஷல் பங்கேற்றார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று முன்தினம் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய பெண் சர்கம் கவுஷல் முதலிடம் பெற்று பட்டத்தை வென்றார். … Read more

ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து எலான் மஸ்க் வெளியேற 57 சதவீதம் பேர் விருப்பம்

சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் ட்விட்டர் நிறு வனத்தை கையகப்படுத்திய பிறகு2 மாதங்களாக சிஇஓ வாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் பணி நீக்கம் உட்பட அவர் எடுத்த பல முடிவுகள் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் கருத்துக் கணிப்பு நடத்தினார் எலான் மஸ்க்.கருத்து கணிப்பு தொடங்கிய நான்கு மணி நேரத்தில் 90 லட்சம் பேர் தங்களது … Read more