சபாஹர் துறைமுக திட்டம் இந்தியா உட்பட பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது – ஈரான் மந்திரி

புதுடெல்லி, ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அலி பகேரி கனி, நேற்று தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ​​இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து அவர் விவாதித்தார். ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அலி பகேரி கனி கூறியதாவது, இந்தியாவும் ஈரானும் … Read more

புல்லட் கவச கார் வேண்டாம்… ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்

புதுடெல்லி, இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் உள்ளன. அவற்றில் அந்நாட்டு தூதர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த 4 பெண் தூதர்கள் டெல்லியில் உள்ள தூதரகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் துப்பாக்கி குண்டுகள் (புல்லட்) துளைக்காத கவச வாகனங்களில் செல்வதற்கு பதிலாக ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்வதிலேயே விருப்பம் கொண்டுள்ளனர். இதற்காக தனியாக ஆட்டோவை வாங்கி வைத்து உள்ளனர். அவற்றிலேயே 4 தூதர்களும் பணிக்கு செல்கின்றனர். இதுதவிர, பணி நிமித்தம் எங்கேனும் செல்ல வேண்டுமென்றாலும் … Read more

மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு!

மலேசியாவின் பிரதமராக மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆசிய நாடான மலேசியா நாடாளுமன்றத்திற்கு கடந்த 19 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 222 இடங்களில் ஆட்சி அமைக்க 112 இடங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பகதான் ஹரப்பான் கூட்டணி 82 இடங்களை வென்றது. முன்னாள் … Read more

ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமலுக்கு வந்த 'கசையடி' தண்டனை

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமலுக்கு வந்த பிறகு அங்கே பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருந்தசட்ட திட்டங்களையும் மாற்றியுள்ளனர். அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர். குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியை காண வருமாறு … Read more

போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை: இலங்கை அரசு அதிரடி!

இலங்கை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதாவது, போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்டை நாடான இலங்கையில், போதைப் பொருள் வைத்திருந்தால் … Read more

பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீர் நியமனம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை ராணுவம் அனுப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது. இதில், இரண்டு பேர் இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கூட்டுப் படைகளின் தலைவர் … Read more

வீங்கிய விரல்கள்… நடுங்கும் கால்கள்… புடின் உடல் நிலை குறித்த பகீர் தகவல்கள்!

ரஷ்யா உக்ரைன் போர்: உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது வெளிவந்துள்ள புடினின் படத்தில், அவரது கை விரல்கள் வீங்கியுள்ள தோற்றம் பல விதமான கவலைகளை எழுப்பியுள்ளது. உண்மையில், புடின் வீங்கிய விரல்களுடன் நாற்காலியை இறுக்கமாகப் பிடித்தபடி காணப்பட்டார். செவ்வாய்கிழமை (நவம்பர் 22) கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் உடன் நடத்திய சந்திப்பில் எடுக்கப்பட்ட புடின் புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் தனது … Read more

பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதி: யார் இந்த லெப்டினென்ட் ஜெனரல் அசிம் முனீர்?

பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்து உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதை அடுத்து ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட … Read more

இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்| Dinamalar

கொழும்பு: ”நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல், ஆட்சியை முன்கூட்டியே கலைக்க முடியாது,” என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. பெட்ரோல் – டீசல் கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர், பிரதமர் வீடுகள் … Read more

கஜினி ஸ்டைலில் எலான் மஸ்க் ரசிகர் ஒருவர்…! செவ்வாய் கிரகம் செல்ல துடிக்கிறார்…!

பிரேசிலியா சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு தொடர்ச்சியாக ஊழியர்கள் நீக்கம் என அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று என்ன நடக்குமோ என அவரது நிறுவன ஊழியர்கள் பயந்து நடுங்கிவரும் நிலையில் எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட அவரது ரசிகர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ள … Read more