ஜெருசலேமில் இரட்டை ஆணி வெடிகுண்டு தாக்குதல்கள்: ஒருவர் பலி; 22 பேர் காயம்

டெல் அவிவ், ஜெருசலேம் நகரில் அடுத்தடுத்து இன்று காலை 2 முறை வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன. மேற்கு ஜெருசலேம் நகரின் கிவாத் ஷால் பகுதியில், பேருந்து நிறுத்தம் ஒன்றின் நுழைவு வாயிலில் காலை 7 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதனை தொடர்ந்து ரமோத் ஜங்சனில், நகரின் நுழைவு வாயில் பகுதியில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. எனினும், வெடிகுண்டு தாக்குதல்களில் ஒன்று, … Read more

“இங்கு அலுவலக அரசியலே கிடையாது” – கல்லறை காவலாளியாக மனநிறைவு காணும் சீன இளம்பெண்

பீஜிங்: சீனாவைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் அலுவலக அரசியலை தவிர்ப்பதற்காக கல்லறையில் காவலாளியாக பணி செய்வதாக கூறிய பதிவு வைரலாகியது. சீனாவில் இளைஞர்களிடம் பிரபலமாக இருப்பது டிக் டாக். டிக் டாக்கில் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர சீனர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், டிக் டாக்கில் டான் (22) என்ற இளம்பெண் ஒருவர் பகிர்ந்த புகைப்படமும், பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அப்படி டான் என்ன பதிவிட்டிருக்கிறார் என்று கேட்கிறீர்களா? … Read more

15 ஆண்டுகளில் 31 பெண்கள் பாலியல் வன்கொடுமை மரணத்திற்கு பின் கண்டறியப்பட்ட குற்றவாளி

சிட்னி ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் 1985 – 2001 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆரம்பகால விசாரணையில், முதலில் பல்வேறு நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டது. பின்னர் ஒருவழியாக டி.என்.ஏ சோதனை மூலம், இதைச் செய்தவர் கீத் சிம்ஸ் என்பது தெரியவந்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்தக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும் கூட 2001-ம் ஆண்டு, 12 பாதிக்கப்பட்ட நபர்களின் … Read more

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: பலர் உயிரிழப்பு என தகவல்

வாஷிங்டன், அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினத்தந்தி Related Tags : அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்

அர்ஜென்டினாவுக்கு எதிராக வெற்றி: விடுமுறையில் சவுதி அரேபிய மக்கள் வெற்றிக் கொண்டாட்டம்

ரியாத்: கத்தார் உலகப் கோப்பை கால்பந்து போட்டியில் 2 -1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா வென்றதைத் தொடர்ந்து பொது விடுமுறை அளித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விடுமுறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் சவுதி அரேபிய மக்கள் ஈடுபட்டுள்ளனர். கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின. தோகாவில் 80 ஆயிரம் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் … Read more

இந்திய தங்க பதக்கத்தை விற்றுவிட்டார் இம்ரான் கான்| Dinamalar

இந்தியா அளித்த தங்க பதக்கத்தை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விற்றுவிட்டதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் தெரிவித்தார். பாக்., பிரதமராக இம்ரான்கான் பதவி வகித்தபோது, சவுதி மன்னர் அளித்த விலை உயர்ந்த பரிசுகளை அரசு கஜானாவில் அவர் ஒப்படைத்தார். பின், அதை குறைந்த விலைக்கு வாங்கிய இம்ரான் கான், வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்தாககுற்றச்சாட்டு எழுந்தது. இதில் கிடைத்த வருவாய் குறித்து தன் வருமான வரிக் கணக்கில் இம்ரான் குறிப்பிடவில்லை என சர்ச்சை … Read more

அமெரிக்கா: வெர்ஜீனியா வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை!

செசாபீக்: அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் செசாபீக் நகரில் வால்மார்ட் சூப்பர் ஸ்டோரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். கடை மேலாளர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதாக வெர்ஜீனியா மாகாண காவல்துறை, முதல் கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.   வால்மார்ட் கடையில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட அந்த நபர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். தற்போது அவரும் உயிருடன் இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணமோ அல்லது யார் இந்த வன்முறையை நிறைவேற்றியது என்ற தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.   மேலும் படிக்க … Read more

தந்தையின் மரண தண்டனையை பார்க்க அனுமதி கேட்கும் மகள்!| Dinamalar

செயின்ட் லூயிஸ்: கொலை வழக்கில் தன் தந்தைக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்ப்பதற்கு அனுமதி கேட்டு அவருடைய மகள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கான்சாஸ் நகரைச் சேர்ந்த கெவின் ஜான்சன், 37, என்பவருக்கு போலீஸ்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரண தண்டனை, நவ., 29ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த, 2005ல், 19 வயதில் இருந்த கெவின் ஜான்சன் மீது தன் … Read more

தன்னம்பிக்கையின் சிகரம் யூடியூபர் கானிம் அல் முஃப்தா: உடற்பயிற்சி வீடியோ வைரல்

கத்தாரின் உலகக் கோப்பை தொடக்க விழாவில் அனைவரையும் கவர்ந்த ஒரு நட்சத்திரத்தின் எழுச்சியூட்டும் கதை இது. யூடியூபர் கானிம் அல் முஃப்தா, 20 வயதான இந்த இளைஞர், பிறப்பிலேயே குறைபாட்டுடன் பிறந்தார். பாதி உடலுடன் பிறந்த இவர், மத்திய கிழக்கின் மிகவும் நம்பிக்கையான மனிதர்களில் ஒருவர் என்று சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கிறார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரின் மனதையும் கவர்ந்து வைரலாகிறது. இந்த இளைஞர், லாஃப்பரோவில் அரசியல் படிக்க வேண்டும், பாராலிம்பியனாக வேண்டும் என்று கனவு … Read more

இந்தோனேஷிய நிலநடுக்கம் பலி 268 ஆக உயர்வு; ௧௫௧ பேர் மாயம்| Dinamalar

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ௨௬௮ஆக உயர்ந்துள்ளது. மேலும், ௧௫௧ பேரை காணவில்லை. இதற்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள சியான்சுரில் நேற்றுமுன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த நிலநடுக்கத்தில் … Read more