19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளின் 10 ஆண்டு கால ஏக்கத்தை பூர்த்தி செய்யுமா ஆஸ்திரேலியா?

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர். குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  2013ம் ஆண்டுக்கு முன்னதாக படகில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர விசாக்களில் தங்கி உள்ள அகதிகளின் குடும்ப மீள் ஒன்றிணைவு விசாக்களுக்கு குறைந்தளவிலான முன்னுரிமையே வழங்கப்படும் என்ற முந்தைய உத்தரவில், … Read more

வனவிலங்கு சரணாலயத்தில் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்ட இரண்டு ஆண் யானைகள்..!

தாய்லாந்திலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு ஆண் யானைகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன. அரை மணி நேரத்தில், இரு முறை அவை மோதிக்கொண்டதால், அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். வனத்துறையினர், ஒலிபெருக்கி மூலம் சத்தமிட்டு அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். நவம்பர், டிசம்பர் மாதங்கள் யானைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதால் மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.  Source link

Weight Loss Tips: 190 கிலோவில் இருந்து 87 கிலோ… 16 வயது சிறுவன் சாதித்தது எப்படி!

மனதில் உறுதியும் ஆர்வமும்  ஆர்வமும் இருந்தால்,  முடியாது என்ற ஒன்று உலகில் இல்லை. இதை உண்மை என நிரூபித்துள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த 16 வயது ஆர்யா பர்மனா. இவ்வளவு இளம் வயதில் பர்மனா காட்டிய மன உறுதி, பெரியவர்களையும் உற்சாகப்படுத்துகிறது. உண்மையில், சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பர்மனா உலகின் குண்டான பையனாக இருந்தார். அவரது எடை 190 கிலோவாக இருந்தது, ஆனால் 6 வருட கடின உழைப்பால் தற்போது தனது எடையை 87 கிலோவாக … Read more

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி; அம்பலப்படுத்திய இளவரசருக்கு உயரிய விருது.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more

மேற்கு ஜாவாவில் நிலநடுக்கம் – 46 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சியாஞ்சுர் நகரில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நேரிட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5 புள்ளி 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், 4 பள்ளிகள் மற்றும் 52 குடியிருப்புகள் பலத்த சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

துருக்கியின் தரைப்படைகள் இனி சிரியாவை தாக்கும்; அதிபர் எர்டோகன் அறிவிப்பு.!

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா மக்கள் பாதுகாப்பு படை என்ற குர்திஸ் ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன், துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்தநிலையில் துருக்கியை சமாளிப்பதற்காக சிரியாவின் அரசுப் படைகளுடன் சமரசம் செய்துகொண்டது சிரியா ஜனநாயகப் படை. இந்தநிலையில் கடந்த நவம்பர் 13ம் தேதி, துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள … Read more

அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த காவலாளிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கு திடீரென துப்பாக்கியால் சுட்டார். அப்போது, அருகிலிருந்த காவலாளி அவர் மீது பாய்ந்து அவரை மடக்கவும் மற்ற ஊழியர்களும் சேர்ந்து அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகிய நிலையில் காவலாளியை ஏராளமானவர்கள் பாராட்டி வருகின்றனர். Source link

மகளை கொன்று சூட்கேசில் வைத்து வீசிய தந்தை கைது| Dinamalar

லக்னோ: விருப்பத்திற்கு மாறாக வேறு சமூகத்தை சேர்ந்தவரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் தாங்காத தந்தை பெற்ற மகளை சுட்டுக்கொன்று சூட்கேசில் வைத்து வீசிய சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பகுதியில் கடந்த 18-ம் தேதி அனாதையாக கிடந்த சூட்கேஸ் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுரா போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்த போது 22 வயது இளம் பெண் சடலம் இருந்துள்ளதும், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான காயம் இருந்தது. … Read more

குழந்தைகளின் மரணத்தில் லாபம் தேடும் நபர்களுக்கு இரக்கம் காட்டமாட்டேன்: எலான் மஸ்க்

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்பதற்காக அவரது டுவிட்டர் கணக்கு கடந்த 2020-ம் ஆண்டு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தன. இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே … Read more

சிறுத்தை முன்னங்காலால் மசாஜ் செய்ய.. சாவகாசமாக ஓய்வெடுக்கும் வங்காள புலி..!

சீனாவின் ஹூசோ நகர உயிரியல் பூங்காவில் சிறுத்தை ஒன்று, புலிக்கு மசாஜ் செய்வது போன்ற காணொலி வெளியாகி உள்ளது. சாவகாசமாக படுத்திருந்த புலியை, மசாஜ் செய்வதுபோல் முன்னங்கால்களால் ஜாக்குவார் இன சிறுத்தை அழுத்தியதை, பூங்கா ஊழியர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். வனப்பகுதியில், புலியும், சிறுத்தையும், எதிரும் புதிருமாக இருக்கும்நிலையில், உயிரியல் பூங்காவில் சிறுவயது முதலே அவை ஒரே வேலிக்குள் பராமரிக்கப்பட்டு வருவதால், ஒன்றோடொன்று அந்நியோன்யமாக பழகிவருகின்றன. Source link