ரஷ்யா – உக்ரைன் போர்: கண்ணீர் விட்டு அழுத போப் ஃபிரான்சிஸ்!

இத்தாலி தலைநகர் ரோமில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்திய போப் ஃபிரான்சிஸ், உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து நேட்டோ படையில் இணையவும் உக்ரைன் விருப்பம் காட்டி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சிப்பதால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த … Read more

The Lava show: எரிமலையே இல்ல ஆனா அது வெடிக்கறத பார்க்க விருப்பமா? லாவாவை பார்க்கலாம் வாங்க

The Lava show: எரிமலை என்றாலே திகிலான உணர்வு ஏற்படும், இதனை பற்றி நாம் அறிந்திருப்போம். நெருப்பு குழம்பாக இருக்கும் எரிமலையின் சீற்றம் என்பது பேரழிவை ஏற்படுத்தும். எரிமலையின் அருகில் போவதற்கு யாருக்குமே விருப்பமோ அல்லது துணிவோ இருக்காது. இயற்கைச் செயல்பாடான எரிமலை சீற்றத்தில், பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும், அதீத வெப்பமுடைய நீரும், கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும், அதீத வேகத்துடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படும். அதைப் பார்க்க நெருப்பு ஆறு ஓடுவது போல … Read more

உலக கோப்பை கால்பந்து: அரையிறுதியில் அர்ஜென்டினா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில், நெதர்லாந்துடன் நடந்த காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4 – 3 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. டிச.,13ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், அர்ஜென்டினா – குரேஷியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் பிரேசில் அணி, குரேஷியாவுடன், பெனால்டி ஷூட் அவுட்டில், 2 – 4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, … Read more

ஹிஜாப்புக்கு எதிராக போராடிய பெண்களின் கண், மார்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தெஹ்ரான்: ஈரானில் ‘ஹிஜாப்’புக்கு எதிராக போராடிய பெண்களின் கண், மார்பு ஆகியவற்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் துணி மற்றும் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிஜாப் அணியாத பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறப்புப் படையும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக ஈரானில் … Read more

பிரதமரை புகழும் சர்வதேச ஊடகங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :’குஜராத்தில், வரலாறு காணாத வெற்றியின் வாயிலாக பா.ஜ., அரசு புதிய சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கே முக்கிய காரணம்’ என, பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. கடந்த 1995 முதல், தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, … Read more

ஹிஜாப்புக்கு எதிராக போராடிய பெண்கள் மீது கொடூர தாக்குதல்| Dinamalar

தெஹ்ரான், ஈரானில் ‘ஹிஜாப்’புக்கு எதிராக போராடிய பெண்களின் கண், மார்பு ஆகியவற்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் துணி மற்றும் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிஜாப் அணியாத பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறப்புப் படையும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக ஈரானில் பெண்கள் கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக … Read more

விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்,அதாவது பல வருடங்களாக டுவீட் அல்லது டுவிட்டரில் உள்நுழைவு இல்லாத … Read more

வடக்கு பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

ஒவ்கடங்கு, ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், பர்கினோ பாசோவின் வடக்கே உள்ள போலா பகுதியில் துப்பாக்கி … Read more

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பெண்களின் கண்கள், மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு – பகீர் தகவல்

தெஹ்ரான், ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவை ஈரான் கலைத்துள்ளது. இதனிடையே, கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஒடுக்க ஈரான் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.82 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 21 லட்சத்து 18 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more