பாலியல் சுகத்திற்காக பின்பகுதியில் வெடிகுண்டை சொருகிய 88 வயது முதியவர்… அலறிய மருத்துவர்கள்!

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டூலோன் நகரில் உள்ள செயிண்ட் மூஸ்ஸே மருத்துவமனைக்கு, 88 வயது முதியவர் தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கிக்கொண்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை  (டிச. 17) அன்று வந்தார். வெடிகுண்டு இருப்பதை அறிந்ததால் அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த பலரும், மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்,”கடந்த சனிக்கிழமை (டிச. 17) இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை அவசரநிலை ஏற்பட்டது, இதற்கு வெடிகுண்டு அகற்றும் பணியாளர்களின் … Read more

லெபனானில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம்..!

லெபனானில் விழிப்புணர்வை ஏற்படுத்த, மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப் பரப்பவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நன்கொடையாக பெறப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பச்சை நிற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் வெள்ளை நிற பாட்டில்கள் மூலம், இந்த கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைக்க ஒரு மாத காலம் ஆனதாக கூறப்படுகிறது. நாம் வாழும் பூமியை சேதப்படுத்தினால், வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என வடிவமைத்தவர்கள் தெரிவித்தனர். Source … Read more

போரில் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “போரில் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்” என்று உறுதிபட தெரிவித்தார். சோவியத் யூனியன் உடைந்தபோது 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனிநாடாக உதயமானது. ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த உக்ரைன் கடந்த 2014-ம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின்பக்கம் சாய்ந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப் படையில் (நேட்டோ) இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதன்காரணமாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த … Read more

உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – டிமிட்ரி பெஸ்கோவ்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தால், எந்த ஒரு நன்மையும் உக்ரைனுக்கு கிடைக்காது எனவும், உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும், ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி, மோதலை தீவிரப்படுத்தும் எனவும், உக்ரைனுக்கே எதிர்வினையாற்றும் என்றும் எச்சரித்தார். Source link

பீலே உடல் நிலை மோசம்; சிறுநீரகம், இருதயம் பாதிப்பு| Pele was in poor health; Kidney and heart damage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாவ் பாலோ: பீலே உடல் நிலை மோசமாக உள்ளது. இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, 82. மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ‘ஆப்பரேஷன்’ செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் … Read more

சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று – நாள்தோறும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்

பெய்ஜிங்: சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களாக சீனாவில் கரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினமும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது. எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பன குறித்த விவரங்களை சீன அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது. எனினும் அந்த நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சீனாவின் உண்மை நிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோவை … Read more

சீனாவில் தினந்தோறும் 10 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு, 5000 உயிரிழப்புகள்? லண்டன் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

சீனாவில் தினமும் பத்து லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு, தினந்தோறும் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சமாக அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடியாக உள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது. சுனாமியாக தாக்கியுள்ள சீனாவின் கோவிட் அலை பற்றி லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் சீன அரசு … Read more

தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி உயிருடன் மீட்பு..!

தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி, 14 மணி நேரத்திற்கு பின், உயிருடன் மீட்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படைக்கு சொந்தமான சுகோதாய் கப்பல் 106 வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. பலத்த காற்றுடன் அலைகள் எழும்பியதால், கப்பலில் தண்ணீர் புகுந்து, கடலில் மூழ்கத்தொடங்கியது. தகவல் அறிந்து சென்ற கடற்படையினர், 75 பேரை உயிருடன் மீட்டனர். கடலில் மூழ்கிய 31 பேரை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடி வந்த நிலையில், உயிர் கவச ஆடையுடன்  தத்தளித்துக்கொண்டிருந்த மாலுமியை … Read more

''எங்கள் இலக்கு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது'' – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

மாஸ்கோ: உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை ரஷ்ய நோக்கமாக கொண்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 10 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 10 மாதங்களில் முதல்முறையாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் செய்தார். ஜெலென்ஸ்கி – பைடன் பேச்சுவார்த்தைக்கு ஒருநாளுக்கு பின் உக்ரைன் … Read more

கனடா: வாக்குவாதம் முற்றியதில் முதியவரை குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகள்

டொரண்டோ, கனடா நாட்டின் டொரண்டோவில் ரெயில் நிலையம் அருகே மக்கள் கூடும் சந்தை பகுதியில் 59 வயது முதியவர் ஒருவரை 8 டீன்-ஏஜ் சிறுமிகள் அடித்து தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்து கிடந்த அவரை காப்பாற்ற, பக்கத்தில் இருந்தவர்கள் துணை மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், படுகாயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சிறுமிகள் அவரை அடித்து, … Read more