இலங்கையில் கோழிக்கறி கிலோ ரூ.1,200 ஆக உயர்வு

இலங்கையில் ஒரு கிலோ கோழிக்கறி ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் தற்போது கோழிக்கறிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வந்த கோழிக்கறி கிலோவிற்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 90 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சங்கம், முட்டை விலை அதிகரிப்பால் கிறிஸ்துமஸ் கேக் விலையும் உயரும் என்று … Read more

பிலாவல் பூட்டோ மீதான இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி மீதான இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச், “குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த படுகொலை குறித்த உண்மைகளை மறைக்க இந்திய அரசு முயல்கிறது. இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் நீதியிலிருந்து தப்பி, இப்போது இந்தியாவில் முக்கிய அரசுப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பதே உண்மை. இந்தியாவின் ஆளும் கட்சியின் அரசியல் சித்தாந்தமான … Read more

உள்ளூர் கால்பந்து போட்டியில் கோல் கீப்பரை மைதானத்திற்குள் நுழைந்து தாக்கிய ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் விக்டரி அணிக்கும், மெல்போர்ன் சிட்டி அணிக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் கோல் கீப்பரை தாக்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய ஏ லீக் போட்டியில், கிராண்ட் ஃபைனல்ஸ் தொடரை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிட்னிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதை கண்டித்து ரசிகர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், மைதானத்திற்குள் நுழைந்த  விக்டரி அணி ரசிகர்கள், சிட்னி அணி கோல் கீப்பரை சூழ்ந்து கொண்டு தாக்கினர். Source … Read more

பெண் பணியாளரின் பின்னாடி அறைந்த மேனேஜர்… இழப்பீடு இத்தனை லட்சமா?

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் பணியாளரை, அலுவலக கூட்டத்தின்போது எழுந்து திரும்பி நிற்கும்படி மேனேஜர் கூறியுள்ளார். அதன்படி, திரும்பி நின்ற பெண்ணின் பின்புறம் அந்த மேலாளரால் அனைவருக்கும் முன்னால் ஒரு ஸ்கேலால் அறைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மேலாளர், “மன்னிக்கவும், இதை செய்ய வேண்டியதாகிவிட்டது” எனக் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மற்றொரு ஆண் மேலாளரைப் பார்த்து, “அது அனுமதிக்கப்பட்ட ஒன்றா” எனக் கூறி கேள்வியெழுப்பியுள்ளார். இரு மேலாளர்களும் அதை நகைச்சுவையாகக் கருதினர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வந்த … Read more

பெரு நாட்டின் அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலகக்கோரி போராட்டம்.. சாலைப்போக்குவரத்து முடங்கியதால் படகு மூலம் ஆற்றை கடக்கும் மக்கள்..!

பெரு நாட்டின் அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் பெரு-பொலிவியா எல்லையில் போக்குவரத்தை முடக்கினர். இதனால் வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் சாலையில் நீண்ட வரிசையில் நிற்கின்றன. பொதுமக்களில் சிலர் படகுகள் மூலம் ஆற்றைக் கடந்து வருகின்றனர். முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், முக்கியச் சாலைகள் மற்றும் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. Source … Read more

ஜெர்மனியில் உள்ள மிகப் பெரிய மீன் அருங்காட்சியகத்தில் விபத்து: 1,500 மீன்கள் உயிரிழப்பு

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள உலகின் மிகப் பெரிய மீன் அருங்காட்சியகத்தில் இருந்த தொட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஏறத்தாழ 1,500 மீன்கள் உயிரிழந்தன. வண்ணமயமான, அரிதான மீன்கள் பல, உலகம் முழுவதிலும் உள்ள மீன் அருங்காட்சியகங்களில் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில் உலகின் மிகப் பெரிய மீன் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “அக்வாரியத்தில் இருந்த மிகப் பெரிய தொட்டி வெடித்தது. இதனால் … Read more

2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத புதிருக்கு தீர்வு கண்ட கேம்பிர்ட்ஜ் பல்கலைகழக இந்திய மாணவர்!

கேம்பிரிட்ஜ் பலகைகழகத்தின் இந்திய மாணவர் ரிஷி ராஜ்போபட் 2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத புதிரை, சமஸ்கிருத மொழியின் தந்தை என்று அழைக்கப்படும் பாணினி எழுதிய இலக்கண விதியை டிகோட் செய்து சாதித்துள்ளார். கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து பல சமஸ்கிருத அறிஞர்களால் தீர்க்க முடியாமல் போன இலக்கண புதிருக்கு இறுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இந்திய  மாணவர் ரிஷி ராஜ்போபட்  தீர்வு கண்டுள்ளார். பி எச் டி மாணவரான அவரது ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ரிஷி ராஜ்போபட், சமஸ்கிருந்த … Read more

சிம்பா சிங்கத்திற்கு சிறப்பு கேக் தயாரித்து 14வது பிறந்தநாள் கொண்டாடிய பூங்கா ஊழியர்கள்..!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கத்திற்கு, 14வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிம்பா என்றழைக்கப்படும் இந்த சிங்கம், கடந்த 2016ம் ஆண்டு Santa Catarina பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டது. சிம்பா சிங்கத்தின் 14வது பிறந்தநாளை ஒட்டி பூங்கா ஊழியர்கள், இறைச்சி, ரத்தம் உள்ளிட்டவற்றால் ஆன கேக்கை தயாரித்து சிங்கத்திற்கு வழங்கினர். சிங்கம் அந்த கேக்கை உண்டு மகிழ்ந்ததை, பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். Source link

இறுதிப் போட்டிக்கு முன்பாக வீடியோவில் பேச கோரிக்கை வைத்த ஜெலன்ஸ்கி: நிராகரித்த ஃபிஃபா

கத்தார்: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக அமைதிச் செய்தியை உலக மக்களிடையே வீடியோ வடிவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கத்தாரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் மனித உரிமை அத்துமீறல் குறித்தும், உலக அமைதி குறித்தும் இறுதிப் போட்டிக்கு முன்பாக வீடியோவில் தோன்றி … Read more

கள்ள நோட்டுகளை அச்சடித்து ஆடம்பரமாய் வாழ்ந்த தந்தை -மகன்! அதிர்ச்சியில் போலீஸார்!

இங்கிலாந்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் லண்டன் அருகே உள்ள தங்கள் வீட்டில், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி மதிப்புள்ள போலி நோட்டுகள்ளை அச்சிட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். போலிஸாரின் விசாரணையில் குற்றவாளிகள் இருவர் சாதுர்யமாக மேற்கொண்ட கள்ள நோட்டு அச்சடித்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸ் விசாரணையில், குற்றவாளிகள் நீண்ட நாட்களாக நாடு முழுவதும் சுற்றித் திரிந்து போலி நோட்டுகளை சப்ளை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இவர்கள் தங்களின் சொந்த வீட்டில் அச்சடித்த … Read more