நீச்சல் குளத்தில் விழுந்த குட்டியை குளத்திற்குள் குதித்து பத்திரமாக காப்பாற்றிய பிட்புல் நாய்..!

பிரேசிலில் நீச்சல் குளத்தில் விழுந்த நாய்க்குட்டியை பிட்புல் ரக நாய் ஒன்று காப்பாற்றும் காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. ஜார்டினோபோலிஸ் பகுதியில் உள்ள வீட்டில், நீச்சல் குளத்திற்கு அருகே 3 நாய்க்குட்டிகள் விளையாடிய நிலையில், அதில் ஒன்று தண்ணீருக்குள் விழுந்தது. இதைக் கண்ட பிட்புல் ரக நாய், வேகமாக ஓடிச் சென்று நீச்சல் குளத்திற்குள் குதித்து, நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டது.   Source link

15 வயது பள்ளி மாணவி அடித்து கொலை| Dinamalar

டெஹ்ரான்: ஈரானில், ஆட்சிக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த 15 வயது பள்ளி மாணவி, பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், பொது இடங்களில் பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிவது கட்டாய சட்டமாக உள்ளது. இதை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஹிஜாப் அணியாமல் சென்றதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் … Read more

லண்டன் உயிரியல் பூங்காவில் பிறந்த 3 சுமத்ரா புலிக்குட்டிகள்..!

லண்டன் உயிரியல் பூங்காவில், கடந்த ஜூன் மாதம் பிறந்த மூன்று சுமத்ரா புலி குட்டிகளுக்கு இன்கா, ஜாக், கிறிஸ்பின் என பெயரிடப்பட்டுள்ளன. புலிக்குட்டிகள் மூன்றும் தாய் புலியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சுமத்ரா புலிகள் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது சுமார் 300 சுமத்ரா புலிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த புலிக்குட்டிகள் மூலம், அந்த இனத்தை பாதுகாக்கும் முயற்சியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.  Source link

இங்கிலாந்தில் ஆற்றுப்பாலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிப்பு.!

இங்கிலாந்தில் ஆற்றுப்பாலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நியூகாஸ்டில்  நகரிலிருந்து கார்லில்  நகருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், ஆற்று பாலத்தை கடந்தபோது, தடம புரண்டதால் 7 பெட்டிகள் கவிழ்ந்தன. பாலமும், ரயில் பாதையும் சேதமடைந்ததை அடுத்து, பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. பாலத்தை சீரமைக்க பல நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மசூதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மாடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து..!

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகப்பெரும் குவிமாடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், மசூதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், அந்த வளாகத்தில் இருந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கட்டடங்களிலும் தீ பரவியது. Source link

மீண்டும் ரிஷி சுனக்… கருத்துக்கணிப்பில் குவியும் ஆதரவு – பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் லிஸ் ட்ரஸ். பிரிட்டனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டார். அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த … Read more

பிரிட்டன் அரசில் மீண்டும் குழப்பம் 45 நாளில் பதவி விலகினார் பிரதமர்| Dinamalar

லண்டன்:பொருளாதாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், சொந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்பை அடுத்து, பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், 45 நாட்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரத்துக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்க முடியும். அதன்படி, கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் … Read more

பெண்களிடம் அத்துமீறும் ஈரான் அரசு 15 வயது பள்ளி மாணவி அடித்துக் கொலை| Dinamalar

டெஹ்ரான் :ஈரானில், ஆட்சிக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த 15 வயது பள்ளி மாணவி, பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், பொது இடங்களில் பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிவது கட்டாய சட்டமாக உள்ளது. இதை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஹிஜாப் அணியாமல் சென்றதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் … Read more

மசூதி தரைமட்டம்.. முஸ்லீம்கள் ஷாக்; பகீர் வீடியோ உள்ளே!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஜகார்த்தா இஸ்லாமிய மையம் உள்ளது. இங்குள்ள பெரிய மசூதி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை புதுப்பித்தல் பணிகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. குருவி மாடம் விழுவதற்கு சற்று முன்பு அதில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பியதை வெளியான வீடியோ … Read more