அரியணை ஏற்கும் நிகழ்வில் சேவகர்களிடம் கடிந்துகொண்ட சார்லஸ்.. மேஜையில் ஏராளமான பொருட்கள் இடையூறாக இருந்ததால் ஆத்திரம்
பிரிட்டன் அரசராக சார்லஸை பிரகடனப்படுத்தும் நிகழ்வின்போது மேஜையை ஒழுங்கு படுத்தும்படி ஊழியர்களிடம் அவர் கடிந்துகொண்ட காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அரியணை ஏற்கும் பிரகடனத்தில் கையெழுத்திட அவர் தயாரானபோது, அந்த சிறிய மேஜையில் பேனா டப்பா, இங்க் பாட்டில் என ஏராளமான பொருட்கள் இடையூறாக இருந்ததால் கடுப்பான சார்லஸ் அவற்றை அப்புறப்படுத்துமாறு அரண்மனை சேவகர்களிடம் கடிந்துகொண்டார். Source link