பிரான்சில் 170 விமானங்கள் ரத்து – என்ன காரணம்?

பாரீஸ், பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்குமாறு பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என ரியான் ஏர் விமான … Read more

கேரளாவில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானம்: தனித்தனியாக பிரித்து கொண்டு செல்ல திட்டம்

திருவனந்தபுரம்: கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை போர் விமானமான எஃப்- 35பி பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதால், அந்த விமானத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் எஃப்- 35பி ஸ்டெல்த் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் முயற்சிகள் தோல்வியில் … Read more

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்

டோக்கியோ, பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் … Read more

உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்

கீவ்: உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில் மட்டும் 23 பேர் படுகாடமடைந்தனர். ஒருபக்கம் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் … Read more

அமெரிக்கா: நைட் கிளப்புக்கு வெளியே துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

சிகாகோ, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ரிவர் நார்த் பகுதியில் உணவு விடுதிகள் மற்றும் பார்களுடன் கூடிய நைட் கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைட் கிளப் ஒன்றுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி நேற்றிரவு சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதன்பின்பு, வாகனத்தில் வந்த அந்நபர்கள் உடனடியாக தப்பி விட்டனர். இதனை தொடர்ந்து தெருவெல்லாம் அழுகுரலாகவும், ரத்தம் வழிந்தோட மக்கள் அலறியபடியும் நாலாபுறமும் ஓடினர். சிலர், யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என தேடினர். அவர்களில் … Read more

டிரம்ப் கொண்டு வந்த வரிக்குறைப்பு மசோதா! சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவற்றம்..

Donald Trump Tax Big Beautiful Bill Passed : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரிக்குறைப்பு மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது.

திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்: சீனா

பெய்ஜிங்: திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா … Read more

ஜெர்மனியில் சத்குருவிற்கு "புளூ டங்" விருது வழங்கி கவுரவம்

ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் செயல்பட்டு வரும் “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் உலக … Read more

ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது; விமான சேவைகள் தொடக்கம்!

தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்களும், ஈரான் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானில் முழுமையாக விமானங்கள் … Read more

உக்ரைன் உடனான போரை புதின் நிறுத்துவார் என தோன்றவில்லை: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவேன்.” என வாக்குறுதி அளித்தவர் டொனால்ட் ட்ரம்ப். இரண்டாவது முறையாக டொனால்ட் டரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், … Read more