ரஷ்யா நடத்திய தாக்குதலால் குளிர்காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற திட்டம்

உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலால் குளிர்காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கெர்சன் மற்றும் மைகோலைவ் நகரில் இருந்து இது தொடங்கலாம் என்றும், அவர்கள் உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு பகுதிக்கு மாற்றப்படுவார்கள் என்றும்  துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார். இந்த குளிர்காலம் உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் … Read more

கடந்த 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்த பாக். ராணுவ தளபதி குடும்பம்

இஸ்லாமாபாத்: கடந்த 6 ஆண்டு காலத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவித் பாஜ்வாவின் குடும்பத்தார் கோடிக்கணக்கில் சொத்துகளைக் குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. ஃபேக்ட் போக்கஸ் என்ற இதழில் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் அகமது நூரானி இதுதொடர்பாக ஆய்வு செய்து தகவல்கள், ஆதாரங்களுடன் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வாவும், அவரது குடும்பத் தாரும் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் வாங்கிய பண்ணை வீடுகள், வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள், கோடிக்கணக்கான சொத்து விவரங்கள் போன்றவற்றை ஃபேக்ட் … Read more

ஃப்ளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பலி!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஃப்ளோரிடாவின் லிட்டில் டார்ச் கீ கடற்கரையிலிருந்து 50 மைல் தொலைவில் அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு, பலத்த காற்றினால் திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 பேரை பத்திரமாக மீட்டனர். கடலில் மூழ்கி மாயமான … Read more

நேபாளத்தில் ஓட்டு எண்ணிக்கை துவக்கம்; முழுமையான முடிவை அறிவிக்க ஒரு வாரம் ஆகும்| Dinamalar

காத்மாண்டு : நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலைக் கிராமங்களில் இருந்து சில ஓட்டுப் பெட்டிகள் வர தாமதம் ஏற்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நாடு முழுதும் உள்ள 1.79 கோடி வாக்காளர்களுக்கு 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன; 61 சதவீத ஓட்டுகள் … Read more

சித்ரவதையால் மியான்மர் பணிப்பெண் உயிரிழப்பு – சிங்கப்பூரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி மூதாட்டி

சிங்கப்பூர்: மியான்மரைச் சேர்ந்த பியாங் கை டான் என்ற 24 வயது இளம் பெண், சிங்கப்பூரின் பீஷான் பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தில் கடந்த 2015, மே மாதத்தில் வீட்டு பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். இப்பெண் 14 மாதங்களுக்குப் பிறகு தலையில் பலத்த காயம் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணை யில் இப்பெண் அந்தக் குடும்பத் தினரால் சித்ரவதைக்கு ஆளானது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் … Read more

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 62 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர். மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இங்குள்ள மேற்கு ஜாவா தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. (6.21 மைல்) ஆழத்தில் இதன் மையப்பகுதி காணப்பட்டது. 5.6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சியாஞ்சூர் … Read more

இந்தியா மிகச் சிறந்த நண்பன் அமெரிக்க அதிகாரி உருக்கம்| Dinamalar

வாஷிங்டன் ”உலகில் அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த பலன் தரக் கூடிய, பாரத்தை சுமக்கக் கூடிய, இணைந்து பயணிக்கக் கூடிய நாடு என்றால், அது பிரதமர் மோடியின் இந்தியா தான்,” என, அமெரிக்க முதன்மை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பின்னர் கூறினார். அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகம்சார்பில், பல்வேறு மதப் பண்டிகைகளை கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சாந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். … Read more

மலேஷியாவில் தொங்கு பார்லிமென்ட்: ஆட்சி அமைப்பதில் சிக்கல்| Dinamalar

கோலாலம்பூர் மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, தொங்கு பார்லிமென்ட் உருவாகி உள்ளது. புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற தலைவர்கள் தீவிர பேச்சு நடத்தி வருகின்றனர். உத்தரவு தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷிய பார்லி.,க்கு கடந்த 19ல் தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 222 தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, 220 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 111 இடங்கள் … Read more

நேபாளத்தில் ஓட்டு எண்ணிக்கை துவக்கம் முழுமையான முடிவை அறிவிக்க ஒரு வாரம் ஆகும்| Dinamalar

காத்மாண்டு:நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலைக் கிராமங்களில் இருந்து சில ஓட்டுப் பெட்டிகள் வர தாமதம் ஏற்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நாடு முழுதும் உள்ள 1.79 கோடி வாக்காளர்களுக்கு 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன; 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஓட்டு எண்ணிக்கை … Read more

இந்தோனேஷியாவில் நில நடுக்கம் 162 பேர் பலி; 700 பேர் காயம்| Dinamalar

ஜகார்த்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால், பள்ளி உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து 162 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள சியான்சுரில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஏராளமான வீடுகள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 162 பேரின் உடல்கள் இதுவரை … Read more