தலிபான் தண்டனையில் இருந்து தப்பிக்க இளம்பெண் தற்கொலை| Dinamalar

காபூல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்ல திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். உயர் கல்வி கற்க, பொது இடங்களில் தனியாக நடமாட, வேலைக்குச் செல்ல, காதல் திருமணம் செய்ய தடை விதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான பெண்கள் உயர் கல்வியை இழந்தனர். ஏராளமானோர் வேலையை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த 1.8 … Read more

வலியை சமாளித்து வாழ வழி இருக்கு :இன்று (அக்.18) உலக ‛மெனோபாஸ் தினம்| Dinamalar

மதுரை :’மெனோபாஸ்’ என்பது மாதவிடாய் நிற்பது மட்டும் அல்ல. ஹார்மோன் மாற்றங்களும் அதுசார்ந்த உடல்நல வேறுபாடுகளும் ஏற்படுவதால் அதற்கேற்ப பெண்கள் தயாராவதே நல்லது என்கிறார் மதுரை மகப்பேறு நிபுணர் ரேவதி ஜானகிராம்.அவர் கூறியதாவது:‘மெனோபாஸ்’ மனநலம் சம்பந்தப்பட்டது. ஒருபக்கம் வயதாவதால் வரும் மாற்றங்கள், மறுபுறம் ஹார்மோன் குறைவதால் ஏற்படும் மாற்றங்கள். இதை ஒவ்வொரு பெண்ணும் அறிவது அவசியம். பிரெய்ன் பாக்’ எனும் மூளை மூடுபனி, அதாவது சிந்திக்க சிரமப்படுவது, ஞாபகசக்தி குறைதல், மனச்சோர்வு, தேவையற்ற கவலை, படபடப்பு போன்றவை … Read more

பிரிட்டன் பிரதமரின் வரி சலுகைகளை ரத்து செய்தார் புதிய நிதி அமைச்சர்| Dinamalar

லண்டன், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் சமீபத்தில் அறிவித்திருந்த அனைத்து வரிச் சலுகைகள் உள்ளிட்டவற்றை, பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் … Read more

பாக்., இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி அமோகம்| Dinamalar

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த இடைதேர்தலில், முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ‘தெஹ்ரிக் – இ – இன்சாப்’ கட்சி, போட்டியிட்ட எட்டு இடங்களில் ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். மேலும், மாகாணங்களில் இம்ரான் கானின் தெஹ்ரிக் – … Read more

ரஷ்ய அடுக்குமாடி கட்டடத்தில் போர் விமானம் மோதி விபத்து!

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஐஸ்க் (Yesyk) நகரில், ரஷ்ய போர் விமானம் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் மோதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பெரும் புகை எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை ஐஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார். ஐஸ்க், உக்ரைன் நாட்டிற்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் என கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய போர் விமானத்தின், விமானிகள் விபத்திற்கு முன்னரே வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கவர்னர் வெனியமின் கோண்ட்ராடியேவ் கூறுகையில், விபத்துக்குள்ளானது சுகோய் … Read more

Video : விமானப் பணிப்பெண்ணின் விரலை கடித்த போதை ஆசாமி!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் சென்றுகொண்டிருந்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் போதை இருந்த பயணியால் பெரும் கலவரமே ஏற்பட்டது. போதையில் இருந்த அந்த பயணி விமானப் பணிப்பெண்களுடன் சண்டையிட்டதால், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து ,ஜகார்த்தாவுக்குச் சென்ற விமானத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க | அழகியுடன் உல்லாசம்… தனது ‘ஆபாச’ வீடியோவை தானே வெளியிட்ட அரசியல்வாதி! தற்போது, அந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக … Read more

'வயாகரா' பயன்படுத்தி வன்கொடுமை செய்யும் ரஷ்ய வீரர்கள் – ஐநா சிறப்பு பிரதிநிதி குற்றச்சாட்டு

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்யா ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கப்படுவதாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் குற்றஞ்சாட்டி உள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த போரில் பாலியல் வன்முறை தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் … Read more

பூச்சிகளை உட்கொள்ள அனுமதி? – சிங்கப்பூர் அரசு பரிசீலனை!

சிங்கப்பூர் நாட்டில் பூச்சிகளை உட்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து அந்த நாட்டின் உணவுத் துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பூச்சிகளை மனிதா்கள் உணவாகக் கொள்ளவும், கால்நடைத் தீவனமாக அளிக்கவும் அனுமதிப்பது தொடா்பாக உணவு மற்றும் கால்நடைத் தீவன தொழில் துறையிடம் அரசு கருத்து கோரி உள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் பாச்சைகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களை மனிதா்கள் உட்கொள்ள முடியும். இந்தப் பூச்சிகளை நேரடியாகவோ, எண்ணெயில் பொறித்தோ சாப்பிட முடியும் … Read more

போதை மருந்து வாங்க அஸ்தியை திருடிய இளைஞன்! அதிர்ச்சியடைந்த போலீஸார்!

அமெரிக்காவில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உண்மையில் இங்கு ஒரு இளைஞன் தனது முன்னாள் காதலியின் தாயாரின் அஸ்தியைத் திருடிச் சென்றான். முன்னாள் காதலி, தனது தாயின் இறுதிச் சடங்குக்குப் பிறகு, அதனை வீட்டில் வைத்திருந்தாள். இதில், ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இளைஞனே, முன்னாள் காதலியை தொடர்பு கொண்டு, தாயின் அஸ்தியை திருடிச் சென்றதைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு ஈடாக அதனை விற்பதற்காக தனது முன்னாள் காதலியின் தாயின் அஸ்தியை திருடியதாக இளைஞன் தெரிவித்துள்ளார். இருப்பினும்,  அஸ்திக்கு … Read more

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்: தலிபான்களின் கல் அடியைத் தவிர்க்க இளம்பெண் தற்கொலை

காபூல்: வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதற்காக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் கல் அடி பெற்று உயிரை விடுவதைத் தவிர்க்க இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 90களில் அவர்கள் நடத்திய அதே காட்டுமிராண்டித் தனமான ஆட்சியையே கையில் எடுத்துள்ளனர். பெண் கல்விக்கு தடை, இசை, நடனம், பொழுதுபோக்குக்கு தடை. விளையாட்டுகள் கூடாது. ஷியா, சன்னி மற்றும் … Read more