போதை மருந்து வாங்க அஸ்தியை திருடிய இளைஞன்! அதிர்ச்சியடைந்த போலீஸார்!

அமெரிக்காவில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உண்மையில் இங்கு ஒரு இளைஞன் தனது முன்னாள் காதலியின் தாயாரின் அஸ்தியைத் திருடிச் சென்றான். முன்னாள் காதலி, தனது தாயின் இறுதிச் சடங்குக்குப் பிறகு, அதனை வீட்டில் வைத்திருந்தாள். இதில், ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இளைஞனே, முன்னாள் காதலியை தொடர்பு கொண்டு, தாயின் அஸ்தியை திருடிச் சென்றதைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு ஈடாக அதனை விற்பதற்காக தனது முன்னாள் காதலியின் தாயின் அஸ்தியை திருடியதாக இளைஞன் தெரிவித்துள்ளார். இருப்பினும்,  அஸ்திக்கு … Read more

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்: தலிபான்களின் கல் அடியைத் தவிர்க்க இளம்பெண் தற்கொலை

காபூல்: வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதற்காக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் கல் அடி பெற்று உயிரை விடுவதைத் தவிர்க்க இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 90களில் அவர்கள் நடத்திய அதே காட்டுமிராண்டித் தனமான ஆட்சியையே கையில் எடுத்துள்ளனர். பெண் கல்விக்கு தடை, இசை, நடனம், பொழுதுபோக்குக்கு தடை. விளையாட்டுகள் கூடாது. ஷியா, சன்னி மற்றும் … Read more

இஸ்தான்புல்லில் உள்ள 24-மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..!

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள 24-மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஃபிகிர்டெப் பகுதியில் உள்ள வானளாவிய அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென பக்கவாட்டில் உள்ள அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியாத நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்தது. … Read more

உக்ரைனிய பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்யும் ரஷ்ய வீரர்கள்: ஐ.நா., பிரதிநிதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்வதாக ஐ.நா., சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது கடந்த எட்டு மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய வீரர்கள் உக்ரைனை … Read more

UK: சிக்கலில் லிஸ் ட்ரஸ்; ரிஷி சுனக்கின் பிரதமர் கனவு நிறைவேறுமா..!!

பிரிட்டனில் மற்றொரு அரசியல் நெருக்கடி உருவாக உள்ளது. ஏனெனில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், இரண்டு மாதங்கள் கூட பதவியில் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவருக்கு எதிராக கன்சர்வேடிவ் கட்சியில் கிளர்ச்சி வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிரான கிளர்ச்சி எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் அரசியல்வாதியான ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராகும் தனது கனவை நனவாக்க இது வழி வகுக்கும் … Read more

வறுமை ஒழிப்பு தினம் | உலக அளவில் வறுமையில் வாடும் நாடுகளும் காரணங்களும்

1987, அக்டோபர் 17 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள மனித உரிமைகள் மற்றும் விடுதலைக்கான சதுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் ஓரணியில் திரண்டனர். பசி, வறுமை, வன்முறை மற்றும் அச்சம் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் திரள் அது. ஜோசப் ரெசின்ஸ்கியின் நினைவுத் தூணின் திறப்பை முன்னிட்டு கூடிய கூட்டமும் கூட. மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் மூலமாக வறுமையை ஒழிப்பை முன்னெடுத்த தன்னார்வ தொண்டு நிறுவனமான இன்டர்நேஷனல் மூவ்மெண்ட் … Read more

ஈரானில் அரசியல் கைதிகள் சிறையில் தீ விபத்து: 8 பேர் பலி

தெஹ்ரான்: ஈரானின் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இவின் சிறையில் நடந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ளது இவின் சிறை. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகள் இங்கு அடைத்து வைக்கப்படுவர். இந்தச் சிறையில் அடைத்து வைக்கப்படுபவர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாஷா அமினியின் இறப்பைத் தொடர்ந்து ஈரானில் எழுந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்ட பலரும் இந்த சிறையில் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.89 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 99 லட்சத்து 30 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

ஈரான் சிறையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உடல் கருகி பலி

டெஹ்ரான், ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் புறநகர் பகுதியான எவின் என்கிற இடத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் பெரும்பாலும் அரசு எதிர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த சிறையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது அங்குள்ள துணி கிடங்கில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் சிறைச்சாலை முழுவதும் பரவியது. … Read more

சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாடு தொடங்கியது: ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா?

பீஜிங், உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீன அதிபர் ஜின்பிங் சீனாவின் அரசியல், பொருளாதார ஆதிக்கம் கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்கு முழுமுதற் காரணமானவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங். இவர் சீனாவின் அதிபராக கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, நாட்டின் … Read more