டேட்டிங் தொடர்பாக சிறுமிக்கு அறிவுரை வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன் – இணையதளங்களில் வைரலாகும் வீடியோ..!

சிறுமி ஒருவருக்கு டேட்டிங் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுரை வழங்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், 30 வயதாகும் வரையில் ஆண்கள் யாரும் உன்னிடம் சீரியசாக நடக்க மாட்டார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார். இதைக்கேட்ட சிறுமி, இந்த கருத்தை தாம் மனதில் வைத்து கொள்வதாக கூறிவிட்டு, சிரித்தார். சமூகவலைதளங்களில் வெளியான இந்த வீடியோ, இதுவரை 50 லட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும், பைடனின் கருத்தால் சிறுமி … Read more

ஆஸ்திரேலியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளில் பலத்த மழையால் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   2-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Source link

எலிக்குள் மனித மூளை! புதிய அறிவியல் சாதனை படைத்த விஞ்ஞானிகள்! குரங்கு… மனிதன்… எலி??

மனித மூளை செல்களை புதிதாகப் பிறந்த எலிகளுக்குள் வெற்றிகரமாக பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மனித மூளை செல்களை புதிதாகப் பிறந்த எலிகளுக்குள் பொருத்தி ஒருங்கிணைத்து, ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் போன்ற சிக்கலான மனநலக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிப் பெற்றுள்ளனர். இதன்மூலம், மனநலக் கோளாறுகளை போக்கும் சிகிச்சை முறைகளை பரிசோதிப்பது சுலபமாகும். பொதுவாக மனநலக் கோளறு எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆய்வு செய்வது நம்பமுடியாத அளவிற்கு கடினம் என்பதால் இந்த … Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடக்கம்: மீண்டும் அதிபராகிறார் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வதுதேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் (69), 3-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில்,கட்சியின் பொதுச் செயலர் தேர்வுசெய்யப்படுகிறார். அவரே நாட்டின் அதிபராகவும் பதவியேற்கிறார். இந்த நடைமுறைப்படி 2013 மார்ச் 14-ம் தேதி சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றார். 2017-ல்2-வது முறையாக அவர் அதிபராகத் தேர்வு … Read more

வறுமை என்னும் நோயை தீர்க்க வா…- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -| Dinamalar

‘உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது’ என்கிறார் பிரான்சை சேர்ந்த பாதிரியார் ஜோசப் ரெசின்கி. சிறு வயதிலேயே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. இதனை ஐ.நா., சபை அங்கீகரித்தது. ‘குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தை முன்னேற்றி வறுமையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து நிலைகளிலும் வறுமைக்கு தீர்வு காண ஐ.நா., இலக்கு … Read more

அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை| Dinamalar

வாஷிங்டன் : ”அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்று இருக்கும் நேரத்திலும், இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் வலுவாக உள்ளது. ”உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் குறைவாகவே உள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா வந்துள்ளார். வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: … Read more

சிப் ஏற்றுமதிக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி| Dinamalar

வாஷிங்டன் : சீனாவுக்கு அதிநவீன, ‘கம்ப்யூட்டர் சிப்’களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமம் பெற வேண்டும் என, அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த முடிவு, தொழில்நுட்பத் துறையில் சீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க விதித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த தடை விதிப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, அமெரிக்க – சீன உறவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அடுத்த … Read more

உக்ரைன் -ரஷியா போர்… ராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

உக்ரைன் -ரஷியா இடையே கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருவதன் விளைவாக ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் … Read more

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்யமாட்டோம்: சீனாவுக்கு தைவான் பதிலடி

தைபே: சீன தேசிய மாநாட்டில் தைவான் குறித்து ஜி ஜின்பிங் பேசியதற்கு தைவான் பதிலடி அளித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் நடந்தது. மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, “தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவான் பிரச்சினையில் சீன மக்கள் தான் … Read more