ஆசிய சாம்பியனை உலக கோப்பை தகுதிச்சுற்றில் வீழ்த்திய நமீபியா| Dinamalar

தெற்கு ஜீலோங்: ஆஸ்திரேலியாவில் டுவென்டி – 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. குரூப் ஏ பிரிவில் தகுதி சுற்றில், ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியும், நமீபியா அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில், பேட்டிங், பவுலிங் மற்றும் … Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு | தைவான் முதல் பொருளாதாரம் வரை ஜி ஜின்பிங் உரையின் முக்கிய அம்சங்கள்

பீஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் நடந்தது. 2300 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பலத்த கரகோஷங்களுக்கு இடையே ஜி ஜின்பிங் வருகை தந்தார். இந்த மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். சீனாவில் ‘ஒரு கட்சி ஆட்சி’ நடைபெறுகிறது. அந்தவகையில், சீனாவில் அதிபர் பொறுப்பை விடவும் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு … Read more

ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்… தைவான் விவகாரத்தில் உறுதி – சீன அதிபர் ஜி ஜின்பிங்

பிஜீங், சீனா நாட்டின் அதிபராக 2012 முதல் ஜி ஜின்பிங் செயல்படு வருகிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 5 ஆண்டுக்கு ஒருமுறை இக்கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கூட்டத்த்லும் ஜி ஜின்பிங் சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. ஒரு வாரம் … Read more

அணு ஆயுத தாக்குதல் அச்சம்; அயோடின் மாத்திரைகளை வாங்கி குவிக்கும் உக்ரேனியர்கள்!

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரால் உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் அணுகுண்டு தாக்குதல் நடத்தக் கூடும் என, அமெரிக்கா, உக்ரைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பது குறித்தும் பேசப்பட்டது. இதற்கிடையில், உக்ரைனில் உள்ள சாமானிய மக்களுக்கு புட்டின் அச்சுறுத்தல் மிகவும் பதற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் உக்ரைனின் … Read more

பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் 200 சடலங்கள் கண்டெடுப்பு

இஸ்லமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நிஷ்டர் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், நிஷ்டர் மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது மருத்துவமனையில் பிணங்கள் இருக்கும் தகவலை ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதனைத் … Read more

கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து..! 20 பேர் உயிரிழந்த சோகம்

டுமாகோ, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் … Read more

'சீனா கட்டுப்பாட்டில் ஹாங்காங்.. அடுத்தது தைவான்!' – அதிபர் ஷி ஜின்பிங் அதிரடி!

சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும், சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனாவின் அதிபராக 2012 ஆம் ஆண்டு முதல் ஷி ஜின்பிங் பதவி வகித்து வருகிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.86 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 96 லட்சத்து 81 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

ரஷிய இராணுவ தளத்தில் "பயங்கரவாத தாக்குதல்" – 11 பேர் பலி, 15 பேர் காயம்

மாஸ்கோ, உக்ரைன் அருகே ரஷிய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவவீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டதாவும், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷியாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷியா ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் … Read more

UNHCR: மலேசிய அரசின் முடிவு மாறுமா? இதோ மாற்று வழி சொல்லும் IDEAS!

UNHCR எனப்படும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையமானது அகதிகளை பாதுகாப்பது, ஆதரவளிப்பது, மீள் குடியமர்த்துதல், மீள் திரும்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் கிளை பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள அகதிகளை நிர்வகிக்கும் பொறுப்பினை அந்நாட்டு அரசே கையில் எடுத்துள்ளது. இதன் காரணமாக மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் அலுவலகத்தை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை … Read more