கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து..! 20 பேர் உயிரிழந்த சோகம்

டுமாகோ, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் … Read more

'சீனா கட்டுப்பாட்டில் ஹாங்காங்.. அடுத்தது தைவான்!' – அதிபர் ஷி ஜின்பிங் அதிரடி!

சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும், சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனாவின் அதிபராக 2012 ஆம் ஆண்டு முதல் ஷி ஜின்பிங் பதவி வகித்து வருகிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.86 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 96 லட்சத்து 81 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

ரஷிய இராணுவ தளத்தில் "பயங்கரவாத தாக்குதல்" – 11 பேர் பலி, 15 பேர் காயம்

மாஸ்கோ, உக்ரைன் அருகே ரஷிய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவவீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டதாவும், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷியாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷியா ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் … Read more

UNHCR: மலேசிய அரசின் முடிவு மாறுமா? இதோ மாற்று வழி சொல்லும் IDEAS!

UNHCR எனப்படும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையமானது அகதிகளை பாதுகாப்பது, ஆதரவளிப்பது, மீள் குடியமர்த்துதல், மீள் திரும்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் கிளை பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள அகதிகளை நிர்வகிக்கும் பொறுப்பினை அந்நாட்டு அரசே கையில் எடுத்துள்ளது. இதன் காரணமாக மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் அலுவலகத்தை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை … Read more

இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் பலி

இஸ்ரேல், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்கு பின்னர் இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார். தினத்தந்தி Related Tags : இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீனர்கள் Israeli soldiers Palestinians

பாகிஸ்தான் அரசு மருத்துவமனை கூரையில் 200 உடல்கள் கண்டெடுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூரையில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. லாகூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் முல்தான் பகுதியில் நிஷ்டர் மருத்துவமனையில் இது நடந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது அவரிடம் ஒருவர் இதுகுறித்து தெரிவித்தார். மருத்துவமனையின் பிணவறையின் கதவை … Read more

உலகில் மோசமான நாடு பாகிஸ்தான் | அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஜோ பைடன் விமர்சனம்

வாஷிங்டன்: உலகின் மிக மோசமான நாடு பாகிஸ்தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்லவோ அல்லது திருடப்படவோ வாய்ப்பு இருப்பதாக அவை தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு வரலாறே உள்ளது.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறி, இது தொடர்பான தொழில்நுட்பத்தை விற்பனை … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு போலீஸ்காரர் உட்பட 5 பேர் பலி| Dinamalar

ராலி:அமெரிக்காவில், சிறுவன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாண தலைநகரான ராலி புறநகர் பகுதியில், இருதினங்களுக்கு முன் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது, திடீரென ஒரு சிறுவன் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின், குற்றவாளியை அவனது வீட்டில் … Read more

சீன அதிபர் தவிர மற்றவர் மாற்றம்? கம்யூ., கட்சி கூட்டத்தில் பரபரப்பு!| Dinamalar

பீஜிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தவிர மற்ற அனைவரும் மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், ஒரு கட்சி ஆட்சி அமைந்துள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளின்படி, ஒருவர் தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டு என, 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும். வலுவானவர் கடந்த 2012ல் அதிபராக பதவியேற்ற ஷீ ஜிங்பிங், கட்சியில் மிகவும் வலுவானவராக உருவெடுத்துள்ளார். கட்சித் தலைவர், … Read more