இந்தியை திணிப்பது இந்தி பேசாத மக்கள் மீதான போர்: புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் இன்று நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக அழைப்பாளருமான சிவா தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைப்பாளர் சிவா பேசியதாவது:‘‘மாநில மொழிகளை அழித்து இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக முடியும். … Read more