நீ இந்த பக்கம் தள்ளு.. நான் அந்த பக்கம் தள்ளுறேன்.. சிறுவனுடன் கால் பந்து விளையாடும் சுட்டி நாய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

சிறுவன் தனது நாயுடன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் எட்டி உதைக்கும் பந்தை தானும் உதைத்தும், தலையால் தள்ளியும் சிறுவன் பக்கம் தள்ளி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Hajj Pilgrimage: மெக்காவின் மசூதியை விரிவுபடுத்த 53 பில்லியன் டாலர்கள் செலவு!

Women Hajj pilgrims: பெண் ஹஜ் யாத்ரீகர்கள் இனி ஹஜ்ஜில் ஆண் பாதுகாவலருடன் செல்ல வேண்டியதில்லை என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் அரசு செயற்பட்டு வருவதாக  சவுதி அரேபியா தற்போது தெரிவித்துள்ளது. ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பும் ஒரு பெண் யாத்ரீகர், இனி ஆண் பாதுகாவலர் அல்லது ‘மஹ்ரம்’ எனப்படும் ஒரு குழுவுடன் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் … Read more

பூமியை நோக்கி வந்த விண்கல்லை திசை மாற்றிவிட்டோம்: நாசா பெருமித தகவல்

நியூயார்க்: பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதை நாசேவே தெரிவித்துள்ளது. குளிர்சாதன பெட்டியைவிட இரு மடங்கு அளவிலான டிமார்போஸ் (Dimorphos) என்ற விண்கல் ஒன்று பூமியின் மீது மோத இருந்ததாக நாசா தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அந்த விண்கல்லை திசைத் திருப்ப டார்ட் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. கடந்த மாதம் 27-ம் தேதி டார்ட் விண்கலம், அந்த விண்கல்லின் மீது … Read more

போக்குவரத்து நெரிசல் குறித்தக் கவலை இனி இல்லை : பறக்கும் டாக்சி அறிமுகம்

காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் தவிக்கும் போது, அப்படியே காரோடு வானத்தில் பறந்து செல்லும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என கண்டிப்பாக யோசித்திருப்போம். இந்தக் கனவு தற்போது நனவாகி உள்ளது. சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பறக்கும் டாக்சி செயல்படும் விதம் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம். பறக்கும் டாக்ஸி பறக்கும் டாக்சி அல்லது ஏர் டாக்சி குறித்து … Read more

26 ஆண்டுகள் சிறைத் தண்டனை: மியான்மர் ராணுவத்தால் ‘பழிவாங்கப்படும்’ ஆங் சான் சூச்சி

நய்பிடா: மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர் ராணுவத்தால் ஆங் சாங் சூச்சிக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. எனினும், … Read more

500 திமிங்கலங்கள் கருணை கொலை: காரணம் என்ன?

நியூசிலாந்து நாட்டில் இருந்து வெகுதொலைவில் சாத்தம் மற்றும் பிட் தீவுகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாத்தம் தீவில் 250 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அடுத்த மூன்று நாட்கள் கழித்து பிட் தீவில் 240க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த தீவுகள் பசுபிக் பெருங்கடலில் இருப்பதாகவும், அந்த பகுதிகளில் சுறா மீன்கள் அதிகம் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த சுறா மீன்களுக்கு பயந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் … Read more

அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்… ரஷ்யாவை எச்சரிக்கும் G7 நாடுகள்!

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்திய நிலையில்,  G7 நாடுகள்  தாக்குதல்களை வன்மையாக கண்டித்ததோடு, உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்  என்று எச்சரித்துள்ளது. வீடு. G7 நாடுகளின் தலைவர்கள் (பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான்), “உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொள்ளும் ரஷ்யா, அணு ஆயுத தாக்குதல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரசாயன, உயிரியல் … Read more

துபாயில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்

துபாய், சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார … Read more

தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! படித்த கல்லூரிக்கு ₹20 கோடி நன்கொடை

குண்டூர்: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ. 20 கோடியை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினார். டாக்டர், உமா தேவி கவினி என்பவர், குண்டூரை பூர்வீகமாகக் கொண்டவர் மற்றும் 1965ம் ஆண்டு, குண்டூர் அரசு மருத்துவக் கல்லூரி GMCஇல் மருத்துவப் … Read more

ஈரான் ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவாக ‘ஆடைத் துறப்பு’ வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

புதுடெல்லி: ஈரான் பெண்கள் நடத்தும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு உலகளவில் பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரான் நடிகை எல்னாஸ் நோரூசி ‘ஆடைத் துறப்பு’ வீடியோ மூலம் தனது ஆதரவை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து எல்னாஸ் நோரூசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடும்போது, “பெண்கள் இந்த உலகில் எங்கிருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவள் விரும்பியதை எப்போதும், எங்கு வேண்டுமானாலும் அணிய உரிமை வேண்டும். எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவளை விமர்சிக்கவோ, தீர்மானிக்கவோ … Read more