கொரோனா பாதித்த நேபாள அதிபர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

காத்மண்டு, நேபாள அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி (வயது 61) உடல்நல குறைவால் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 7-ந்தேதி சேர்க்கப்பட்டார். இதுபற்றி அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். … Read more

இந்தியாவுக்கு வருகை தர அமெரிக்க நிதி மந்திரிக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு 6 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டி.சி. நகரில் அந்நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லன்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நடப்பு சர்வதேச பொதுபொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்கான பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. இந்த சந்திப்பில், வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற … Read more

பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல்லை வெற்றிகரமாக திசை திருப்பியது நாசா..!

பூமிக்கு வெளியே அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது, விண்கலத்தை மோதி, திசை திருப்பும் முயற்சியில், நாசா வெற்றி கண்டுள்ளது. பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் தூரத்தில் சுற்றித்திரியும், டிமார்ஃபாஸ் என்ற விண்கல்லை குறிவைத்து, ராக்கெட் மூலம் டார்ட் விண்கலத்தை, செப்டம்பர் 26 அன்று, நாசா விண்ணில் செலுத்தியது. விண்கலம் வெற்றிகரமாக மோதிய நிலையில், விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாக, நாசா தெரிவித்துள்ளது. Source link

அமெரிக்க விமான நிலையத்தின் இணையதளங்களில் சைபர் தாக்குதல்

நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன. கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சைபர் தாக்குதல்களால் எந்த … Read more

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் – நிபுணர்கள் தகவல்

புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அதில் நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய … Read more

IMF On India: உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும்!

IMF On Economy Growth: இந்தியப் பொருளாதாரம் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்கு உண்மையாக இருந்தால், அடுத்த ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆகியவற்றால் உலகப் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதும். மேலும், உலகம் கடுமையான உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை … Read more

வெனிசுலா நிலச்சரிவுபலி 34 ஆக உயர்வு| Dinamalar

லாஸ் டெஜீரியாஸ் : மத்திய வெனிசுலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை, ஜூலியா சூறாவளி தாக்கியது. இதில் 11 மாகாணங்கள் பாதிப்பை சந்தித்தன. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததை அடுத்து லாஸ் டெஜீரியாஸ் நகரில் கடந்த 8ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளத்துடன் மண்ணும் கல்லும் அடித்துக் கொண்டு வந்ததில், குடியிருப்பு பகுதிகள் காணாமல் போயின. இதில், … Read more

60 லட்சம் கொசு வலைகள் வாங்க பாகிஸ்தான் முடிவு| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நான்கு மாதங்களாக பெய்த இடைவிடாத கனமழை காரணமாக, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதையடுத்து, நாட்டு மக்களுக்கு வழங்க, 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொசுவலைகளை நம் நாட்டில் இருந்து வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை கனமழை கொட்டித் தீர்த்தது. அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான வீடுகள் இடிந்து, மூன்று கோடிக்கும் … Read more

சுவிஸ் வங்கியில் கருப்பு பண முதலீடு: 4-வது கட்ட பட்டியலை பெற்றது இந்தியா

புதுடெல்லி / பெர்ன்: சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் அடங்கிய 4-வது கட்ட பட்டியலை இந்தியா பெற்றுள்ளது. ஆண்டுதோறும் சுவிஸ் வங்கி தகவல்களை தாமாக முன்வந்து பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தகவல்இந்தியாவுக்கு வழங்கப்பட்டுஉள்ளது. மொத்தம் 101 நாடுகளைச் சேர்ந்த 34 லட்சம் நிதி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து 4-வது கட்ட பட்டியலில் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்துதப்பித்து சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக … Read more

நேட்டோ நாடுகளின் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ரஷ்யாவுக்கு எச்சரிக்கை..

நேட்டோ கூட்டு நாடுகளின் மீது தாக்குதல் தொடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யா வான்தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா போரில் தோல்வியைத் தழுவும் அச்சத்தால் அணு ஆயுத இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல்களைத் தொடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு, தங்கள் கூட்டு நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் … Read more