ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் – பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..!

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில், ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கிரீமியாவை, ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் தகர்க்கப்பட்டதற்கு, உக்ரைன் மீது குற்றஞ்சாட்டிய ரஷ்யா, அதற்கு பதிலடியாக திங்கட்கிழமை அன்று, அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி, பயங்கர தாக்குதல் நடத்தியது. அன்றைய தினமே 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் … Read more

இளவரசர் ஹாரியும் மேகனும் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய வேண்டும்: ராணி கமிலா விருப்பம்

லண்டன்: இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்திற்குத் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் ராணி கமிலா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரிட்டீஷ் குடும்ப வரலாற்று ஆசிரியரான லெவின் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ”குடும்ப உறுப்பினர்களை கைவிடக்கூடாது என்று கமிலா நம்புகிறார். ஹாரியும், மேகனும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என கமிலா கருதுகிறார். இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்” என்று … Read more

பாகிஸ்தானில் பள்ளி வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்..!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்து 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்வாட் பள்ளத்தாக்கில், பள்ளி வளாகம் ஒன்றின் வெளியே 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த சிறுமி  படுகாயமடைந்தார். Source link

இளவரசர் ஹாரி , மேகன் மெர்க்கல் மீண்டும் அரண்மணைக்கு திரும்புவார்களா?: ராணி கமீலா அழைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: அரண்மணையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரி, மேகன் மெர்க்கல் தம்பதியினர் மீண்டும் அரண்மணைக்கு திரும்ப வர வேண்டும் என ராணி கன்சார்ட் கமீலா வலியுறுத்தியுள்ளார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இரண்டாம் எலிசபெத் மகனான சார்லஸ் , பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றார். முன்னதாக பிரிட்டன் அரச குடும்பத்தில், 2020ம் ஆண்டு, குழப்பமாக துவங்கியது. மன்னர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் … Read more

இரண்டு லட்சம் பேர் பணி நீக்கம்? -பிரதமரின் முடிவால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா காலத்தில் இகுந்தே அங்கு இந்த தொடர்ந்து கொண்டிருக்கிறது. சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அண்மையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கியமாக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை பணி நீககம் செய்ய பிரிட்டன் ம பிரதமர் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் … Read more

பாகிஸ்தானை மிரட்டும் மலேரியா… இந்தியாவிடம் இருந்து கொசு வலைகள் வாங்க திட்டம்!

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத மழை ஏற்பட்டத்தை தொடர்ந்து பாக்கிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் 1,700 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்; 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர் . நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்நிலையில், செப்டம்பரில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ள பாதிப்பு காரணமாக மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பு பெருமளவு அதிகரித்து  “இரண்டாவது பேரழிவை” ஏற்படுத்தும் என்று எச்சரித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள 32 மாவட்டங்களில் … Read more

லெபனான் உடன் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் எல்லை ஒப்பந்தம்: இஸ்ரேல்

ஜெருசலம்: லெபனானுடன் நீண்ட காலமாக சர்ச்சையாக இருந்த கடல் எல்லை ஒப்பந்தம் முடிவை எட்டியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க கடல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் “வரலாற்றுச் சாதனை” என்றும் இஸ்ரேல் பாராட்டியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் யார் லாபிட் பேசும்போது, “லெபனானுடன் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய கடல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒப்பந்தம் எட்டியுள்ளது. இஸ்ரேலும் லெபனானும் கடல்சார் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க … Read more

மாஷா அமினி மரணம்.. ஈரானில் தீவிரமடையும் அரசுக்கெதிரான போராட்டம்.. பள்ளி மாணவ-மாணவிகள் கைது.!

ஈரானில் 22 வயது இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசுக்கெதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு … Read more

நியூசிலாந்தில் உணவு தேடி கரை ஒதுங்கிய 500 ‘பைலட்’ திமிங்கலங்கள் உயிரிழப்பு..!

நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 500 பைலட் இன திமிங்கலங்கள் உயிரிழந்தன. கடந்த வெள்ளிக்கிழமை சாத்தம் தீவுகளில் 250 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று மீண்டும் 240  திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அங்குள்ள கடல் பகுதியில் வசிக்கும் வெள்ளை சுறாக்களால், மீட்புப்பணியில் ஈடுபடுவோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இறந்த திமிங்கலங்களை கடலுக்கு இழுத்து செல்லும் முயற்சி கைவிடப்பட்டது. நீரிழப்பால் திமிங்கலங்கள் உயிரிழக்கத் தொடங்கிய நிலையில், எஞ்சிய திமிங்கலங்கள் அவதியுறுவதை தடுக்கும் விதமாக, அவை கருணை … Read more

தலிபன்களால் சுடப்பட்டு 10 ஆண்டுகள்… – பாகிஸ்தானுக்கு மலாலா வருகை

இஸ்லாமாபாத்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு நீண்ட காலத்துக்குப் பின் பயணம் மேற்கொண்டிருக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், லண்டனில் உயர் சிகிச்சைக்காக சென்ற மலாலா உயர் தப்பினார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் … Read more