பொருளாதார நோபல் பரிசுக்கு அமெரிக்க அறிஞர்கள் மூவர் தேர்வு

நார்வே: 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்கு, குறிப்பாக நிதிச்சுழல் நேரங்களில் வங்கிகளின் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிதிச் சந்தைகள் மேலாண்மை குறித்தும் இவர்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் … Read more

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: 3 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: நடப்பு 2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,03 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் … Read more

“உக்ரைன் விவகாரத்தை அதிபர் ஜோ பைடன் முட்டாள்தனமாக கையாள்கிறார்”.. 3-ம் உலகப்போருக்கு சாத்தியமிருக்கிறது- டிரம்ப்

உக்ரைன் விவகாரத்தை ஜோ பைடன் முட்டாள்தனமாக கையாள்வதாகவும், இதனால் 3-ம் உலக போர் மூளக்கூடும் என்றும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் குடியரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய டிரம்ப், உக்ரைன் விவகாரத்துக்கு, உடனடியாக அமைதித்தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் 3ம் உலக போருக்கு வழிவகுத்து விடும் என்றும் எச்சரித்தார். Source link

2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு 2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்ன்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிபிவிக் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பான ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு Source link

வடகொரியா மீண்டும்ஏவுகணை சோதனை| Dinamalar

சியோல் : அமெரிக்காவுடன் சேர்ந்து தென் கொரியா புதிய போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை எச்சரிக்கும் விதமாக, வடகொரியா நேற்று இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் கிழக்கு கடலோர நகர் பகுதியான மன்சானில் இருந்து, நேற்று அதிகாலை இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்நிலையில், தென் கொரிய ராணுவம் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவுடன் புதிய கூட்டுப் பயிற்சியை தென் கொரியா துவங்கிய சில … Read more

உக்ரைனின் கீவ் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ரஷ்யா தொடர் தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா அடுத்தடுத்து 3 இடங்களில் ஏவுகணை மூலமாக குண்டுவெடிப்பை நடத்தியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 8 மாதங்களாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா ஆக்கிரமித்த கிரிமியாவில் சில நாட்களுக்கு முன்பு கெர்ச் பாலத்தில் நடந்த வெடி விபத்தை ஒட்டி ரஷ்யா – உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் | கீவ் உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். கிரீமியா பாலத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக உக்ரைன் தலைநகரில் அமைதி நிலவி வந்த நிலையில், திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி 8.15 மணிக்கு தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக வானில் சைரன் ஒலி … Read more

வீட்டில் கிடைத்த ‘அரிய’ புதையல்; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன தம்பதி!

உங்கள் வீட்டில் புதையல் ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும் இல்லையா. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பார்கள். இங்கே, பூமியில் இருந்து புதையலாக கிடைத்துள்ளது. கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு நிஜ வாழ்க்கையில் புதையல் கிடைத்து கோடீஸ்வரர்கள் ஆன சமப்வம் நடந்துள்ளது. வீட்டைப் பழுதுபார்க்க எடுத்த முடிவு அதிர்ஷ்டத்திற்கான ஆதாரமாக மாறியது. இந்த விவகாரம் பிரிட்டனில் நடந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஒரு கிராமத்தில் … Read more

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: மத்திய வெளியுறவு மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு

கேன்பெர்ரா, நியூசிலாந்துக்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அதனை முடித்து கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அந்நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்து உள்ளார். அவருக்கு, இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் வகையில் நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து உள்ளேன். ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய … Read more

ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்த போராட்டக்காரர்கள்

ஈரானில் மாஷா அமினி உயிரிழப்பை தொடர்ந்து அரசுக்கெதிரான போராட்டம் தீவிரமடைந்து 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அரசு தொலைக்காட்சியின் நேரடி ஒளிப்பரப்பை போராட்டக்காரர்கள் ஹேக்கிங் செய்து வீடியோ வெளியிட்டனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு அரசு தொலைக்காட்சியின் நேரடி ஒளிப்பரப்பின் போது உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தினர். Source link