'2671ஆம் ஆண்டில் இருந்து வருகிறேன்… பூமியின் தலையெழுத்தே மாறப்போகிறது' – ஏலியன்கள் படையெடுப்பா?

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கடிக்கணக்கான தகவல்களில் பெரும்பாலானவைக்கு எந்தவித ஆதாரங்களோ அல்லது சாட்சிகளோ இல்லை. சமூக வலைதளங்களில் கூட திடீர் திடீரென நம்ப இயலாத பல தகவல்களும், செய்திகளும் உலா வருகின்றன. ஆன்மீகம் தொடர்பாக இருக்கட்டும், தேசிய பிரச்சனையாக இருக்கட்டும் உண்மைத்தகவல்களுடன் பல பொய் தககவல்களும், ஆதாரங்களற்ற தகவல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.  குறிப்பாக, ஏலியன்கள் குறித்த தகவல்கள், ஏலியன்கள் பூமியில் வசிப்பது போன்றவையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்புகின்றன. அந்த வகையில், ட்விட்டரில் இதுபோன்ற ஒரு வீடியோ … Read more

ஈரானில் அரசு டிவியை முடக்கிய போராட்டக்காரர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு டிவி சில நிமிடங்கள் முடக்கப்பட்டது. ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 13ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு … Read more

பள்ளி மாணவிகளுக்கு பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம்… புயலை கிளப்பிய விவகாரம்!

டென்மார்க் ஆக்கிரமித்துள்ள கிரீன்லாந்தின் 60ம் ஆண்டுகளில், அங்குள்ள பூர்வ குடி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 13 வயது சிறுமிகளுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட சம்பவம் வெளியாகி, அந்நாட்டில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் மருத்துவர்கள் கிரீன்லாந்தின் இன்யூட் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பூர்வ குடி மக்களுக்கு குழந்தை பிறப்பதைத் தடுப்பதற்கும் கருத்தடை சாதனங்களை (IUS) பொருத்தினர். இதற்கு சில பெண்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம், டென்மார்க் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹூனிக் … Read more

குப்யான்ஸ்க் நகரை மீட்க நடந்த மோதலில் 240 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர் – ரஷ்யா அறிவுப்பு..!

கார்கீவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 240-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. குப்யான்ஸ்க்  நகரை மீட்க பெர்ஷோத்ரவ்னேவ் மற்றும் யாஹிட்னே  கிராமங்களை நோக்கி உக்ரைன் படைகள் முன்னேறிய நிலையில், ரஷ்ய படைகளின் பதில் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பெட்ரோபாவ்லிவ்கா மற்றும் கிராஸ்னி பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில், சுமார் 140 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 பீரங்கிகள்,8 காலாட்படை வாகனங்கள் மற்றும் நான்கு கார்கள் அழிக்கப்பட்டதாகவும் … Read more

ரயிலில் 'அந்தரங்க சேவை' – டிக்கெட்டை பார்த்த பயணி அதிர்ச்சி; என்ன நடந்தது?

புதிய ரயில் சேவையோ அல்லது புதிய ரயில்களோ இணையத்தில் அடிக்கடி வைராலகும். ஆனால், சமீபத்தில் ரயிலின் டிக்கெட் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அதிலும், டிக்கெட்டின் விலையோ அல்லது டிக்கெட்டின் வடிவம் குறித்தோ இல்லை, டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த வாசகம்தான் அந்த வைரலுக்கான காரணம்.  ‘ஏசி வசதியுள்ள முதல் வகுப்புகளில் பாலியல் சேவை அளிக்கப்படும்’ என்ற அந்த வாசகம் அடங்கிய டிக்கெட் தான் நெட்டிசன்களால் அதிகம் பரபரப்பட்டு வருகிறது. அதே ரயில் நிலையத்தில் … Read more

அமெரிக்கா ஓஹியோ மாகாணத்தில் பள்ளியில் கால்பந்து போட்டியின்போது துப்பாக்கிச்சூடு – 3 பேர் படுகாயம்..!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில், பள்ளியில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் காயமடைந்தனர். டொலிடோ நகரிலுள்ள விட்மர் உயர்நிலைப்பள்ளி ஸ்டேடியத்தில் நேற்றிரவு, மற்றொரு பள்ளியுடனான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்டேடியத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு, ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடிவரும் போலீசார், தகவல் அளிப்போருக்கு, இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாய் … Read more

சபோரிஜியா நகரில் ஏவுகணைகளை ஏவி ரஷ்ய தாக்குதல் – ஒரு குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்…

தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா நகரில் அடுத்தடுத்து 7 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை அன்று விடியற்காலையில் நடந்த தாக்குதலில் ஐந்தடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. தாக்குதல் நடந்த அன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து தற்போது 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

நோபல் பரிசு வென்ற ஸ்வாந்தே பாபோவை குளத்தில் தூக்கி வீசிய சக பணியாளர்கள்; வைரலான வீடியோ

பெர்லின், நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் மருத்துவ விருதுடன் தொடங்கியது. 2022-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்தே பாபோவிற்கு “அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய … Read more

கிரீமியா பாலத்தில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் ஒரு பகுதியாக ரஷியா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான பகுதிகளை இணைக்கும் கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே கட்டப்பட்ட் முக்கிய பாலம் ஒன்று குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, அதன் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான உத்தரவை ரஷிய அதிபர் புதின் பிறப்பித்து உள்ளார். ரஷியா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான கியாஸ் குழாய் இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்படி அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, கெர்ச் ஜலசந்தி பகுதியில் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்: கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலம் தகர்ப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை குறி வைத்தும், அந்நாட்டின் நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன. உக்ரைந் ரஷ்யா இடையேயான போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டுள்ளது. இதனிடையே உக்ரைனின் முக்கிய நகரான கார்கீவ்வில் நேற்று பல்வேறு … Read more