கைகளால் பிடிமானம் இன்றி 1904 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த ஸ்டண்ட் வீரர்

லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் வீரர் ஒருவர் 1904அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 32 வயதான Arunas Gibieza என்ற வீரர் தான் இத்தகைய சாதனை முயற்சியில் ஈடுபட்ட நபராவார். ,இதற்கு முன்பு 1860அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டியதே சாதனையாக இருந்து வந்தது.  Source link

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!

வாஷிங்டன், தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த பயங்கர சம்பவத்தில், 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்

கொழும்பு, இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே, பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்து சர்வதேச நிதியம் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு, … Read more

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தி கொலை – பின்னணி தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தி, கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், ஹோசிராபூர் மாவட்டம், ஹர்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களது 8 மாத பெண் குழந்தை ஆரூஹி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மெர்சட் பகுதியில் குடும்பத்துடன் வசித்த ஜஸ்தீப் சிங், அங்கு சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார். அவரது அண்ணன் அமன்தீப் சிங்கும் … Read more

இன்று உலக பருத்தி தினம்| Dinamalar

பருத்தியின் முக்கியத்துவத்தை உணர, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 07 அன்று உலக பருத்தி தினம் கொண்டாடப்படுகிறது. பருத்தியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் குறிக்கோள்.விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இது வறட்சியை தாங்கி விளையும் பயிர் என்பதால் உற்பத்தி செலவு குறைவு. உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பருத்தி, துணி உலகில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. … Read more

சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!

உலகின் முன்னணி சமூகவலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவன சந்தை மதிப்பீடு 2022ம் ஆண்டு முதலே சரிவை சந்தித்து வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனத்தில்,கடந்த மே மாதம் முதல் புதிய ஆட்சேர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது பேஸ்புக் நிறுவனம் சத்தம் இல்லாமல் பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, செயல்திறன் மோசமாக உள்ளதாக கருதப்படும் ஊழியர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தகைய ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் … Read more

தாய்லாந்து போல் மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: 18 பேர் உயிரிழப்பு

பாங்காக்: தாய்லாந்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில், முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தின் நாங் புவா லம்பு மாகாணத்தில் உள்ளது உதய் சவான் நகரம். இங்குள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்துக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஆசிரியை உட்பட 9 பேர் இறந்தனர். வெடிச் சத்தம் முதலில் கேட்டதும், … Read more

அமெரிக்காவில் கடத்தப்பட்ட சீக்கிய குடும்பம் படுகொலை| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் அமெரிக்காவில் கடத்தப்பட்ட சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது; அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த டாக்டர் ரந்தீர் சிங் – கிரிபால் கவுல் தம்பதி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் சமீபத்தில் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக இந்தியா வந்துள்ளனர். உடல்கள் மீட்பு இவர்களுடைய மகன்கள் அமன்தீப் சிங், 39, ஜஸ்தீப் சிங், 36, அவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், 27, மற்றும் எட்டு … Read more

ஹரியாணா தனியார் மாநில நிறுவனம் தயாரிக்கும் 4 இருமல் மருந்துகளை நிறுத்த வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப்பகுதியில் காம்பியா நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களில் சிறுநீரக பாதிப்பு காரணமாக 66 குழந்தைகள் உயிரிழந்தன. இதுதொடர்பாக ஆய்வு நடத் தியதில் குறிப்பிட்ட இந்திய நிறு வனத்தின் இருமல் மருந்துகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந் திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தி பிரிவு காம்பியா நாட்டில் 4 … Read more