அமெரிக்க மாகாணத்தை நிலைகுலைய வைத்த 'இயான்' புயல்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. இது புளோரிடா மாகாணத்தைத் தாக்கிய பின்னர் மெதுவாக வலுவிழந்து 2-வது வகை … Read more

கால்பந்து போட்டியில் கலவரம்: இந்தோனேசியாவில் 127 பேர் பலி!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ளூர் அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது நடந்த கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 180 பேர் படுகாயமடைந்துள்ளனர். கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உட்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வெற்றி … Read more

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு!

ஜாவா, இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன. இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். … Read more

சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா., பொதுச் செயலாளர் வாழ்த்து!

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 2ஆம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி, ஒவ்வொரு … Read more

பாகிஸ்தானில் மழை, வெள்ளம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,693ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பல நாட்கள் நீடித்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியது இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை தற்போது குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து, நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 11 சிறுவர்கள் உள்பட … Read more

இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் மோதல்; நெரிசலில் சிக்கி 127 பேர் பலி; 180 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகர்ட்டா: இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் நெரிசலில் சிக்கியும், போலீசார் கண்ணீர் புகை வீச்சில் பலர் மூச்சுத்திணறி 127 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு லோக்கல் சேனல் ஒன்று தெரிவிக்கிறது. நாலாபுறமும் சிதறி ஓடினர் கிழக்கு ஜாவா பகுதியில் இரு அணியினர் நடந்த கால்பந்து போட்டி நிறைவு பெற்றதும் வெற்றி, தோல்வி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் … Read more

எதிர்மறை செய்திகளால் இலங்கை சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுற்றுலாத்துறையை பெருமளவில் பாதித்து இருக்கிறது. இதை வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப அரசும், சுற்றுலாத்துறையும் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இலங்கை குறித்த எதிர்மறை செய்திகளால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வேகமெடுக்கவில்லை என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். ‘இலங்கையில் உணவு தட்டுப்பாடு நீடிக்கிறதா?’, ‘குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லையா?’ என்பது போன்ற கேள்விகளையே வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்கள் எழுப்பி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த எதிர்மறை தகவல்கள் மற்றும் கருத்துகளை போக்கவும், … Read more

Stampede Deaths: ஜகார்த்தாவில் கால்பந்து போட்டி வன்முறையில் நெரிசலில் 127 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்துப் போட்டி ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது. அரேமா மற்றும் பெர்செபயா என்ற இரு அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்துப் போட்டியில் நடைபெற்ற  வன்முறையில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு கலகத் தடுப்புப் போலீசார் மைதானத்தை சுற்றி வளைத்தனர். விளையாட்டு மைதானத்தின் ஆடுகளத்தில் கூடிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். கூட்ட … Read more

18வது பிறந்த நாள் கொண்டாடிய அமெரிக்காவின் அதிசய இளைஞர்| Dinamalar

வாஷிங்டன் :அமெரிக்காவில் மரபணு குறைபாடு காரணமாக இரண்டு முகங்களுடன் பிறந்து, நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்க மாட்டார் என டாக்டர்களால் கூறப்பட்டவர், நேற்று தன் 18வது பிறந்த நாளை கொண்டாடினார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் பிராண்டி. இவரது மகன் ஜான்சன். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், இவர் பிறந்தபோது, டாக்டர்களும், பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜான்சனுக்கு இரண்டு முகங்கள் இருந்தன; அவை ஒழுங்கற்று இருந்தன. ஒரு மண்டை ஓடு, இரண்டு நாசி, பிளவுபட்ட வாய் போன்ற … Read more

மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரன்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் … Read more