வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? – புரளியின் பின்னணி குறித்து அலசல்

புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சில தினங்களாக சுற்றுகின்றன. இது, உண்மையில்லை என்பதை உணர்த்த, வல்லரசு நாடான சீனா அமைதி காத்து வருகிறது. இந்தப் புரளியின் பின்னணியை ஆராய்ந்தால் இது, சீனாவை சீண்டிப் பார்க்கும் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை எனத் தகவல்கள் கிடைக்கின்றன. சீனாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்த செய்திக்கான காரணங்களில் ஒன்றாக, ஜெனிபர் ஜெங் என்பவரது ட்விட்டர் பதிவு … Read more

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி

சியோல், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது டேஜியோன் நகரம். இங்கு பிரபலமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வணிக வளாகத்தின் அடித்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ வேகமாக அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ தொடங்கியது. இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக இறங்கினர். … Read more

ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

டோக்கியோ ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2020-ம் ஆண்டு பதவி விலகிய அவர், கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி அங்கு நரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரை டெட்சுய யமகாமி என்பவர் சுட்டுக்கொன்றார். இது ஜப்பான் மட்டுமின்றி அகில உலகிலும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. ஷின்ஜோ அபேயின் உடலுக்கு ஜூலை 12-ந் தேதி டோக்கியோவில் இறுதிச்சடங்கு … Read more

இலங்கையில் விரைவில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் – எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். பிறகு நாட்டை விட்டு தப்பிச்சென்று பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில், அதேபோன்ற மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று இடதுசாரி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார … Read more

ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது இந்த கம்யூனிஸ்ட் நாடு

கியூபாவில் ஒரு பாலின திருமணங்கள் செய்துக் கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் புதிய குடும்பக் குறியீட்டை அங்கீகரித்த கியூபா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவரக்ள் திருமணம் செய்துக் கொள்வதை சட்டப்பூர்வமாக்குகியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கியூபாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்ட போதிலும், பல ஓரினச்சேர்க்கையாளர்களும், பெண்களும் வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டி வந்தனர். அதனை அடுத்து, கியூபா இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருமண சட்டத்தை அங்கீகரித்துள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகளை உயர்த்தும் புதிய குடும்பச் … Read more

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச் சூடு | மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு – சுட்டுக் கொன்ற மர்ம நபர் தற்கொலை

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 7 மாணவர்கள் உட்பட 13 பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவில் இஸவ்ஸ்க் நகரம் உள்ளது. உட்முர்ஷியா மாகாணத்தின் தலைநகரான இதில் சுமார் 6.3 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை தன்னிடமிருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதையடுத்து, மாணவர்கள் மற்றும் … Read more

ஷின்சோ அபே நினைவு சடங்கில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இன்று நடை பெறவுள்ள நினைவு சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஜப்பானின் நரா நகரில் கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று பேசினார். அப்போது, அவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு ஜூலை 12-ம் தேதி குடும்பத்தினர் சார்பில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், … Read more

உலகில் 20,000 லட்சம் கோடி எறும்புகள்ஆராய்ச்சியாளர்களின் புதிய கணிப்பு| Dinamalar

மெல்போர்ன்,உலகெங்கும், 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் உள்ளதாகவும், அவற்றின் மொத்த எடை 1,200 கோடி கிலோ என்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்த உலகத்தில் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை. இதில், ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சிறிய எறும்பாக இருந்தாலும், மிகப் பெரிய யானை, திமிங்கலமாக இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சில முக்கியத்துவம் உள்ளது.நம் மண்ணை வளமுள்ளதாக்குவதில் இருந்து, பறவைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வது வரை, … Read more

ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதி…. கலக்கும் நித்தி!

தமக்கென கைலாசா எனும் நாட்டை உருவாக்கி அங்கு தனி ராஜ்ஜியம் நடத்திவரும் நித்தியானந்தா சமீபகாலமாக உடல்நிலை குன்றி காணப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கா அவர் இலங்கையில் தஞ்சம் கேட்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. நித்தியானந்தாவின் கோரிக்கைக்கு இலங்கை அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை.. இந்த நிலையில், கைசாலாவைச் சேர்ந்த பெண் பிரதிநிதி ஒருவர் மூலம் இந்நாடு சர்வதேச அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின 77 ஆவது பொதுச்சபை கூட்டம் … Read more