மெண்டவாய் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்த மக்கள்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெண்டவாய் ((Mentawai )) தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மெண்டவாய் தீவுகளில் 6.1 என்ற ரிக்டர் அளவிலும், 5.3 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், மரக்கட்டை விழுந்து ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. Source link